பஞ்சாப் அரசியல் : ஒரு நகைச்சுவை நடிகர் முதலமைச்சர் ஆன கதை
கடந்த முறை நடந்த பஞ்சாப் தேர்தலை ஒட்டுமொத்த இந்தியாவும் உற்றுநோக்கியது காரணம் பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி வாகை சூடியது இதன் மூலம் சாதாரண மாநில கட்சியாக இருந்த ஆம் ஆத்மி பஞ்சாப்பில் ஆட்சி அமைத்தன் மூலம் தேசிய கட்சி இடத்தை பிடித்தது.
ஆம் ஆத்மி பஞ்சாப்
பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்று வருகிறது. தனது நம்பிக்கைக்குரிய தலைவரான பகவந்த் மானை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது. அவரது பெயரை கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்தார்.
பகவந்த் மானை முதல்வர் வேட்பாளராக அறிவித்தபிறகு அரவிந்த் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், "பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக ஆகியிருக்கும் சர்தார் பகவந்த் மானுக்கு வாழ்த்துகள். பஞ்சாப் மக்கள் அனைவரும் ஆம் ஆத்மி கட்சியை ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கின்றனர்.
இது ஒரு பெரிய பொறுப்பு மற்றும் எல்லா பஞ்சாபி மக்களின் முகத்திலும் பகவந்த் மான் மீண்டும் புன்னகையை வரவழைப்பார் என்று நான் நம்புகிறேன்,"என்று பதிவிட்டார். பகவந்த் மானை ஒரு நகைச்சுவை நடிகராகவும், அரசியல்வாதியாகவும் மக்கள் அறிவார்கள். அவர் பஞ்சாபில் உள்ள சங்ரூர் மக்களவைத் தொகுதியில் இருந்து தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
நடிகர் அரசியல்
இவர் ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் மாநிலத் தலைவராகவும் உள்ளார். 2014ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் இணைந்ததில் இருந்து கட்சியின் நட்சத்திர பிரசாரகராக பகவந்த் மான் இருந்து வருகிறார். பஞ்சாப் முழுவதிலும் மக்கள் ஆதரவை பெற்றுள்ள அக்கட்சியின் ஒரே தலைவர் இவர்தான். ஆம் ஆத்மி கட்சியின் மிகப்பெரிய பலமாகவும், பலவீனமாகவும் அவர் கருதப்பட்டார்.
பக்வந்த் மான் 1973 ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி பஞ்சாபின் சங்ரூர் மாவட்டத்தில் ஷீமா மண்டிக்கு அருகில் உள்ள சதோஜ் கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை மகிந்தர் சிங் அரசு ஆசிரியராகவும், தாய் ஹர்பால் கெளர் இல்லத்தரசியாகவும் இருந்தார். பட்டப்படிப்பை முடித்த பிறகு, பகவந்த் மான் நகைச்சுவைத் துறையில் நுழைந்தார். சங்ரூரில் உள்ள சுனாம் ஷஹீத் உதம் சிங் கல்லூரியில் படிக்கும் போது, நகைச்சுவை மற்றும் கவிதைகளில் பல போட்டிகளில் வெற்றி பெற்றார்.
இதன் மூலம் அவர் தொழில்முறை நகைச்சுவை கலைஞரானார். அவரது முதல் நகைச்சுவை மற்றும் நையாண்டி பாடல்கள் ஒலிநாடா,1992 இல், 'கோபி தி ஏ கச்சியே வியாபர்னே' என்ற பெயரில் வெளியானது.இதன் மூலம் அவர் நகைச்சுவை உலகில் பிரபலமானார். 12வது முடித்த பிறகு அவர் பி.காமில் சேர்ந்தார். ஆனால் நகைச்சுவைத் தொழிலில் பிஸியாக இருந்ததால் படிப்பை பாதியில் விட்டுவிட்டார்.
நகைச்சுவை கதாபாத்திரம்
1992 முதல் 2013 வரை 25 நகைச்சுவை ஆல்பங்களை ரெக்கார்ட் செய்துள்ளார். ஐந்து பாடல்களின் டேப்களையும் வெளியிட்டுள்ளார். பகவந்த் மான் 1994 முதல் 2015 வரை 13 ஹிந்தி திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்துள்ளார். 'ஜுக்னு', 'ஜண்டா சிங்', 'பீபோ புவா', 'பப்பு பாஸ்' போன்ற நகைச்சுவை கதாபாத்திரங்களில் பகவந்த் மான் சிறப்பாக நடித்துள்ளார்.
ஜக்தார் ஜக்கி, ராணா ரன்பீர் ஆகியோருடன் நகைச்சுவை பாத்திரத்தில் நடித்துள்ள பகவந்த் மான், 'ஜுக்னு மஸ்த் மஸ்த்' போன்ற நகைச்சுவை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், ' நோ லைஃப் வித் வைஃப்' போன்ற மேடை நிகழ்ச்சிகளையும் செய்துள்ளார். பாடகர் கரம்ஜித் அன்மோலை நகைச்சுவை நிகழ்ச்சிகளுடன் இணைத்து நடிப்பில் இறக்கியவர் பகவந்த் மான். கரம்ஜித் அன்மோல் அவரது கல்லூரி நாள் நண்பர். பஞ்சாபி திரையுலகில் அன்மோலுக்கு பெரிய பெயர் உள்ளது. பகவந்த் , இந்திரஜித் கெளரை மணந்தார். அவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
பஞ்சாப்பில் ஆம் ஆத்மி
மனைவி பகவந்த் மானிடம் இருந்து பிரிந்து அமெரிக்காவில் வசிக்கிறார். இந்த நிலையில் பஞ்சாபில் பகவந்த் மான் முதலமைச்சரானது எப்படி அது வரலாற்று சம்பவம் தான். கடந்த 56 ஆண்டுகளில், பஞ்சாபில் எந்த அரசியல் கட்சியும் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றதில்லை என்று பஞ்சாப் அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பஞ்சாபில், காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் மற்றும் பாரதிய ஜனதா கூட்டணி ஆகியவற்றில் எதுவுமே, ஆம் ஆத்மி கட்சி வென்ற தொகுதிகளில் கால் பங்கைக் கூட எட்டவில்லை. 1966 ஆம் ஆண்டு ஹரியானா-பஞ்சாப் பிரிக்கப்பட்டது. இரு மாநிலங்களாக பிரிந்த பிறகு, 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பஞ்சாபில் காங்கிரஸ் 87 இடங்களை வென்று அசத்தியது. இருப்பினும், அந்த நேரத்தில் பயங்கரவாதப் பிரச்சினை உச்சத்தில் இருந்ததால், சிரோமணி அகாலி தளம் தேர்தலைப் புறக்கணித்தது இதற்குப் பிறகு, 1997 சட்டமன்றத் தேர்தலில் சிரோமணி அகாலி தளம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி 93 இடங்களை ஜெயித்தன. சிரோமணி அகாலி தளம் 75 இடங்களையும், பாரதிய ஜனதா 18 இடங்களையும் பெற்றன.
அந்த வகையில் பார்த்தால், தற்போது 117 இடங்களில் 92 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி கடந்த 56 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளது. இதற்குப் பிறகு, 1997 சட்டமன்றத் தேர்தலில் சிரோமணி அகாலி தளம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி 93 இடங்களை ஜெயித்தன. சிரோமணி அகாலி தளம் 75 இடங்களையும், பாரதிய ஜனதா 18 இடங்களையும் பெற்றன.
அந்த வகையில் பார்த்தால், தற்போது 117 இடங்களில் 92 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி கடந்த 56 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளது. அதாவது பஞ்சாப்-ஹரியானா தனித்தனியாக பிரிந்த பிறகு கிடைத்த பெரிய வெற்றி இதுதான்.
குறிப்பாக 2012 பிப்ரவரியில்,பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் லெஹ்ராகாகா தொகுதியில் பிபிபி வேட்பாளராக பகவந்த் மான் போட்டியிட்டார். பஞ்சாப் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராஜீந்தர் கெளர் பட்டலிடம் பகவந்த் மான் தோல்வியடைந்தார்.
2012 சட்டப்பேரவைத்தேர்தலில், பிபிபி கட்சிக்கு எந்த இடமும் கிடைக்காததால், அகாலி தளம் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. இதையடுத்து மன்பிரீத் சிங் பாதல் காங்கிரஸில் சேரத் தயாராகிவிட்டார். ஆனால் காங்கிரஸில் சேராமல் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்த பகவந்த் மான், 2014 ஆம் ஆண்டு 'ஆம் ஆத்மி 'கட்சியில் இணைந்தார். அன்னா ஹசாரே இயக்கத்தில் இருந்து உருவான ஆம் ஆத்மி கட்சிக்கு பஞ்சாபில் பெரும் ஆதரவு கிடைத்தது.
தேசிய கட்சியான ஆம் ஆத்மி
2014 மக்களவைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் பிரசாரத்தின் முகமாக பகவந்த் மான் இருந்தார். அவர் சங்ரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு 2,11,721 வாக்குகள் வித்தியாசத்தில் அகாலிதளத்தின் மூத்த தலைவர் சுக்தேவ் சிங் திண்ட்சாவை தோற்கடித்தார்.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் விஜய் இந்தர் சிங்லா மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
2019 மக்களவை தேர்தல் நேரத்திற்குள் பஞ்சாபில் அரசியல் சூழ்நிலை மாறிவிட்டது. ஆம் ஆத்மி தனது தேர்தல் பிரச்சாரத்தில் திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாத உதவித் தொகையாக 1,000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதே பாணியை கையில் எடுத்து பஞ்சாப் மக்களின் நம்பிக்கையினை தேசிய கட்சி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.