வாடகை மனைவிகளாக மாறும் இளம்பெண்கள் - எங்கு, ஏன் தெரியுமா?
சுற்றுலா வருபவர்களுக்கு இளம்பெண்கள் வாடகை மனைவிகளாக மாறுகிறார்கள்.
வாடகை மனைவி
தாய்லாந்தின் பட்டாயாவில் வாடகை மனைவிகளின் போக்கு அதிகரித்து வருகிறது. அங்கு பெரும்பாலும் ஏழை கிராமப்புறங்களில் இருந்து வரும் பெண்கள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் துணையாக மாறுகிறார்கள்.
சமீபத்தில் இது குறித்து ஒரு புத்தகம் வெளிவந்து சர்ச்சையாக வெடித்தது. இதில், தாய்லாந்தில் மனைவியை வாடகைக்கு எடுக்கும் சர்ச்சைக்குரிய மற்றும் மறைக்கப்பட்ட நடைமுறை இப்போது மீண்டும் எப்படி அதிகரித்து வருகிறது என்பது குறித்த தகவல் இடம்பெற்றிருக்கும்.
அதிகரிக்கும் நடைமுறை
இந்த ஏற்பாடு முறையான திருமணம் கிடையாது. ஒரு தற்காலிக ஒப்பந்தம் போன்றது. இந்த பந்தம் சில நாட்கள் முதல் பல மாதங்கள் வரை நீடிக்கும். பணம் சம்பாதிப்பதற்கும், குடும்பத்தை நடத்துவதற்கும் பெண்கள் இந்த வகையான வேலைக்கு வருகிறார்கள் சில சமயங்களில் உறவுகள் உருவாகும்போது,
சில பெண்கள் தங்கள் வாடிக்கையாளர்களை திருமணம் செய்து கொள்கிறார்கள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பட்டாயா மற்றும் தாய்லாந்தின் பிற நகரங்களுக்கு வந்து, பார்கள், உணவகங்கள் மற்றும் இரவு விடுதிகள் போன்ற இடங்களில் இந்த பெண்களை நேரடியாக தொடர்பு கொள்கிறார்கள்.
இதுபோன்ற நடைமுறை நடந்து வருவதாகவும், அதைக் கட்டுப்படுத்த எந்த சட்டமும் இல்லை என்பதையும் தாய்லாந்து அரசு ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.