ரூ.1.2 லட்சம் சம்பளம்; இருந்தாலும்.. திருமணத்தை திடீரென நிறுத்திய மணப்பெண்! ஏன்?
மணப்பெண் திருமணத்தை நிறுத்திய காரணம் குறித்த தகவல் வைரலாகி வருகிறது.
அரசு வேலை இல்லை
உத்தரப்பிரதேசம், பரூக்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும், சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூரைச் சேர்ந்த பொறியாளருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
மணமகன் அரசு வேலையில் பொறியாளராக இருப்பதாகவும், மாதம் ரூ.1.2 லட்சம் சம்பளம் பெறுவதாகவும் தெரிவித்துள்ளார். அதன் பின்னே திருமணத்திற்கு மணப்பெண் சம்மதம் தெரிவித்துள்ளார்.
மணப்பெண் மறுப்பு
இந்நிலையில், மணமகன் அரசு வேலையில் இல்லாதது மணப்பெண்ணுக்குத் தெரிய வந்துள்ளது. ஆனால், தனியார் நிறுவனத்தில் மாதம் ரூ.1.2 சம்பளத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இதையடுத்து, திருமண மாலை மாற்றும்போது மணப்பெண் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
இருதரப்பினரும், மணப்பெண்ணிடம் எடுத்துக் கூறியும் அவர் சம்மதிக்கவில்லை. இதனால் திருமணம் நின்றுபோனது. அதன்பின், திருமண ஏற்பாட்டுக்கு ஆன செலவை இரு வீட்டாரும் பகிர்ந்துகொண்டுள்ளனர்.