20 ஏக்கரில் சொந்த பண்ணை வீடு இருக்கனும்.. மாப்பிள்ளைக்கு இளம்பெண் போட்ட கண்டிஷன்!

India Marriage Viral Photos
By Vidhya Senthil Nov 28, 2024 06:03 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

 மேட்ரிமோனியல் விளம்பரத்தில் ஒரு பெண் ஒருவர் வருங்கால கணவருக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 மேட்ரிமோனி

ஒவ்வொருவரும் அவரவருக்குப் பொருத்தமான வாழ்க்கைத் துணையைக் கண்டறிய வேண்டும் என்பதற்காக மேட்ரிமோனி சேவை உதவுகிறது. இதில் தொழில், வருவாய் மற்றும் கல்வித் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தங்களது விருப்பத்திற்குப் பொருத்தமான வரன்களைக் கண்டறிய உதவுகிறது.

A woman different condition matrimonial advertisement

இன்றைய காலகட்டத்தில் தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேடும்போது, ​​​​பல கட்டுப்பாடுகளைப் போடுகிறார்கள். அதாவது மாப்பிள்ளைக்கு நல்ல வேலை , சொந்த வீடு, சொத்து, பேங்க் பேலன்ஸ் போன்ற பல கோரிக்கைகளை வைப்பது வழக்கம். அந்த வகையில் 30 வயது பெண் ஒருவர் மணமகன் தேடும் விளம்பரம் தற்போது வைரலாகி வருகிறது.

பண மாலையிலிருந்த ஒத்த நோட்..சினிமா பட பாணியில் புதுமாப்பிள்ளை சேஸிங் செய்த சம்பவம்!

பண மாலையிலிருந்த ஒத்த நோட்..சினிமா பட பாணியில் புதுமாப்பிள்ளை சேஸிங் செய்த சம்பவம்!

 கட்டுப்பாடு

அந்த விளம்பரத்தில் , மணமகனுக்கு 28 வயது இருக்க வேண்டும். மணமகனுக்கு 20 ஏக்கர் பரப்பளவில் பங்களா அல்லது பண்ணை வீடு இருக்க வேண்டும். குறிப்பாக அவர் ஒரே மகனாக இருக்க வேண்டும் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.இந்த இளம் பெண்ணின் விளம்பரம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதனை டேக் செய்து நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். முன்னதாக தனியார் தொலைக்காட்சியில் வருங்கால கணவர் குறித்து தற்போதைய இளம் பெண்களின் எதிர்பார்ப்பு என்ன என்பது குறித்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது மக்கள் மத்தியில் பேசு பொருளானது.