அதுக்கு இப்படியா பண்ணனும்? ஜாலியா இருக்கும் - 1000 வீட்டுக் கதவுகளை உடைத்த ஆசாமி!

Japan Stress Crime
By Sumathi Nov 29, 2024 09:30 AM GMT
Report

நபர் ஒருவர் மன அழுத்தத்திலிருந்து வெளிவர கடைபிடிக்கும் சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மன அழுத்தம்

ஜப்பான், டஜைஃபூ (Dazaifu) என்னும் பகுதியில், 37 வயது நபர் ஒருவர் அத்துமீறி கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.

அதுக்கு இப்படியா பண்ணனும்? ஜாலியா இருக்கும் - 1000 வீட்டுக் கதவுகளை உடைத்த ஆசாமி! | Breaking More Than 1000 Homes For Stress Relief

இதுகுறித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் திருடர் இல்லை.

தன் மன அழுதத்தைப் போக்குவதற்காக இப்படி வீட்டுக் கதவை உடைத்துச் சென்று, உள்ளே பார்ப்பார். இதுவரை அவர் 1000-க்கும் மேற்பட்ட வீடுகளின் கதவுகளையும், பூட்டையும் உடைத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அவர் உள்ளே சென்ற வீட்டிலிருந்து எதுவும் காணாமல் போகாததால், யாரும் புகார் அளிக்கவில்லை.

சாப்பாடு கூட மன அழுத்தத்தை போக்கும் தெரியுமா? லிஸ்ட் இதோ - ட்ரை பண்ணுங்க!

சாப்பாடு கூட மன அழுத்தத்தை போக்கும் தெரியுமா? லிஸ்ட் இதோ - ட்ரை பண்ணுங்க!

நபர் செய்த செயல்

இதுபோல கதவு உடைத்து உள்ளே சென்றுவிட்டு வந்ததும், அந்த வீட்டின் உரிமையாளர் யார் இதைச் செய்தது என அங்கும் இங்கும் தேடும்போது உள்ளங்கையிலிருந்து ஈரம் சுரக்கும்.

அதுக்கு இப்படியா பண்ணனும்? ஜாலியா இருக்கும் - 1000 வீட்டுக் கதவுகளை உடைத்த ஆசாமி! | Breaking More Than 1000 Homes For Stress Relief

அது ஒருமாதிரி மகிழ்ச்சியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்த தகவல் தற்போது வெளியாகி கவனம் பெற்றுள்ளது.