மனஅழுத்தத்திலிருந்து விடுபட முடியவில்லையா? கவலை வேண்டாம்... இதை செய்யுங்கள்...
மனஅழுத்தம்
இன்று உலகத்தில் மனிதனுக்கு மனஅழுத்தம் பெரும் பிரச்சினையாக உள்ளது. வாழ்வியல் மாற்றங்கள், பொருளாதார சூழ்நிலைகள், குடும்பம், உடல்நலம் மற்றும் சமூக பிரச்சனைகள் போன்றவற்றால் மன அழுத்தம் ஏற்பட முக்கிய காரணமாக அமைகிறது.
இதில் ஆண் பெண் என்ற வேறுபாடு கிடையாது. எல்லோருக்கும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் மனஅழுத்தத்தில் மாட்டிக்கொள்கின்றனர். இந்த மனஅழுத்தத்திலிருந்து நாம் எப்படி கடந்து செல்ல போகிறோம் என்பதுதான் முக்கியம்.
மனஅழுத்தத்தின் அறிகுறிகள்
மனஅழுத்தத்தில் உள்ளவர்களுக்கு கோபம், உடல்எடை அதிகரித்தல், தூக்கமின்மை, மனச்சோர்வு, பதட்டம், மலச்சிக்கல், எரிச்சல், குடல் நோய், நெஞ்செரிச்சல், முதுகுவலி, தலைவலி, தாடை வலி போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
மன அழுத்தத்திலிருந்து நீங்கள் நினைத்தால் எளிதில் அதிலிருந்து விடுபட முடியும். அதற்கான வழிகளும் இருக்கின்றன. அவை என்ன என்பதைப் பார்ப்போம் -
நடைப்பயிற்சி
நடைப்பயிற்சி உங்கள் உடலுக்கு ஆரோக்கியதையும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். தினமும் நடைப்பயிற்சி செய்து வந்தால் உங்களுடைய மனஅழுத்தம் குறையும்.
யோகப் பயிற்சி
யோகப் பயிற்சி செய்வதால் மனம் லேசானது போல் நீங்கள் உணருவீர்கள். இந்த பயிற்சிகள் செய்வதின் மூலம் மனம் ஒரு தெளிவான நிலையை அடையும். சரியாக சிந்தித்து செயல் பட கூடிய ஆற்றலை இப்பயிற்சி உங்களுக்குத் தரும்.
தூக்கம்
தூக்கம் ஒன்றே நமது உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சியை கொடுக்கும். எனவே, நம்முடைய உடலையும், மனதையும் புணர்ச்சியோடு வைத்திருக்க, சரியான நேரத்திற்கு தூங்க செல்ல வேண்டும். இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பது நல்லது கிடையாது. குறைந்தது 7 மணி நேரமாவது தூங்க வேண்டும். இதனால் உங்களுடைய மன அழுத்தம் குறையும்.
இசை
நீங்கள் நேரம் கிடைக்கும்போது இசையை கேட்டுக்கொண்டு இருந்தால் உங்களுடைய மன அழுத்தம் குறையும். நல்ல மென்மையான இசையை கேட்க வேண்டும். இவ்வாறு செய்தால் மன இறுக்கம் தளர்ந்து மனம் லேசாகும்.
உணவு
சரியான நேரத்திற்கு சாப்பிடுங்கள். காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்து கொள்ளுங்கள். காபி மற்றும் டீ போன்ற பானங்களை கொஞ்சம் குறைத்து விடுங்கள். டார்க் சாக்லேட் சாப்பிட்டால் மனஅழுத்தத்தை குறைக்கும்.