அவரால் 5 நிமிடம் கூட உக்கார முடியாது.. நானே பார்த்திருக்கிறேன் - பிரபலம் குறித்து ரகசியம் உடைத்த ரேகா!

Vinothini
in பிரபலங்கள்Report this article
பிரபலம் குறித்து நடிகை ரேகா நாயர் கூறியது வெளியாகியுள்ளது.
ரேகா நாயர்
தமிழ் சினிமாவின் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ரேகா நாயர். இவர் இந்த படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்ததால் பல விமர்சனங்களுக்கு உள்ளனர்.
அவர் நடித்தது குறித்து பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் விமர்சனம் செய்தார். அதன்பின்னர், கடற்கரையில் அவர் வாக்கிங் செல்லும்பொழுது அவரிடம் தகராறில் ஈடுபட்டார். அதன்மூலம் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆனார். இவர் தொடர்ந்து பேட்டிகளில் சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
நடிகை பேட்டி
இந்நிலையில், அவர் பிக் பாஸ் பிரபலமான பவா செல்லதுரை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் அவர், "பாவா மிகவும் பிஸியான மனிதர், அவரால் 5 நிமிடங்களுக்கு மேல் உட்கார்ந்து பேச முடியாது, பிரதமருடன் அமர்ந்து பேசுவதற்கு செல்லத்துரைக்கு வாய்ப்பு கிடைத்தாலும், பிரதமருடன் 5 நிமிடங்களுக்கு மேல் அமர்ந்து பேச முடியாது.
அவர் பல பெரியவர்களுடன் அமர்ந்து பேசுவதைப் பார்த்திருக்கிறேன், எங்கு சென்றாலும் ஒரே இடத்தில் ஐந்து நிமிடங்களுக்கு மேல் அமர்ந்திருக்க மாட்டார். அவர் மிகவும் சுறுசுறுப்பான மனிதர், அவர் பிக் பாஸ் வீட்டில் இருப்பார் என்று உறுதியாக நினைக்கவில்லை" என்று கூறியுள்ளார்.