விஷால் சொன்ன அந்த வார்த்தை.. வாழ்க்கையே போச்சு, ஆபாச படம் எடுக்கப்போகிறேன் - லிவிங்ஸ்டன் வேதனை!
நடிகர் லிவிங்ஸ்டன் தனது வாழ்க்கை குறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.
லிவிங்ஸ்டன்
தமிழ் சினிமாவில் இயக்குனர் பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக பல படங்களிலும் வேலை செய்தவர் லிவிங்ஸ்டன். இயக்குனராகும் ஆசையில் இருந்த இவரை விஜயகாந்த் ‘பூந்தோட்ட காவல்காரன்’ படம் மூலம் நடிகராக மாற்றினார்.
அந்த திரைப்படத்தில் வில்லனாக லிவிங்ஸ்டன் நடித்திருந்தார். பின்னர் பல படங்களில் கதாநாயகனாகவும், வில்லனாகவும், நகைச்சுவை நடிகராகவும் பல வேடங்களில் நடித்து பல ரசிகர்களை ஈர்த்துள்ளார். மேலும், இவர் பல சீரியல் மற்றும் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
நடிகர் பேட்டி
இந்நிலையில், இவர் பேட்டி ஒன்றில் தனது சினிமா வாழ்க்கை குறித்து பேசியுள்ளார். அதில் அவர், "சினிமா இப்பதெல்லாம் முன்ன மாதிரி இல்லாமல் இப்போ கார்ப்பரேட் கம்பெனி போல மாறிவிட்டது. நான் இப்போது ஒரு திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறேன். அதன் பட்ஜெட்டே ஒன்றரை கோடி தான்.
ஆனால் இப்போ தம்பி விஷால் கொஞ்ச நாளைக்கு முன்னாடி யாரும் சின்ன பட்ஜெட்டில் படம் பண்ணாதீங்க. அப்படி படம் பண்ற பணத்தை ரியல் எஸ்டேட்டில் போட்டீங்கன்னா நல்ல லாபம் எடுக்கலாம். ஏற்கனவே நிறைய படங்கள் பெண்டிங்கில் கிடக்கிறது என்று சொன்னார்.
அவர் தெரிஞ்சி சொன்னாரோ தெரியாம சொன்னாரோ அவர் அப்படி சொன்னதால என்னால படம் பண்ண முடியாம இப்ப பாதியிலேயே நிற்கிறது. படம் வல்கராக இருந்தா என்ன? அதுதான் இப்போ ரசிகர்களுக்கு பிடிக்குது. நானும் அடுத்ததா ஒரு வல்கரான படத்தை தான் எடுக்க போறேன். ரசிகர்களுக்கு எது பிடிக்குமோ அதுதான் எனக்கு பிரம்மாண்டம்" என்று கூறியுள்ளார்.