முதலமைச்சரின் பேத்தி நான்.. படிக்கதான் வந்தேன், ஆனால் என்னை கட்டாயப்படுத்தினாங்க - நடிகை பேட்டி!

Tamil Cinema Tamil Actress Actress
By Vinothini Oct 07, 2023 08:30 AM GMT
Report

நடிகை ஒருவர் தான் படத்தில் நடித்தது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

காதல் மன்னன்

நடிகர் அஜித் நடித்த காதல் மன்னன் படத்தில் நடித்தவர் நடிகை மானு. இவர் இந்த படத்திற்கு பிறகு ஃபீல்ட் அவுட் ஆகினார், வேறு படங்களில் நடிக்கவில்லை சினிமாவை விட்டு விலகினார்.

kadhal-mannan-maanu-opened-about-carreer

இது குறித்து அவரிடம் கேட்டபொழுது பள்ளி படிக்கும் காலத்திலேயே காதல் மன்னன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்ததாகவும், தன்னை கட்டாயப்படுத்தி தான் இயக்குனர் சரண் நடிக்க வைத்தார் என்றும் தெரிவித்துள்ளார்.

எனக்கு காதல் திருமணம் தான்.. ஆனா இது மட்டும் நடந்ததில்லை - நடிகை ஓபன் டாக்!

எனக்கு காதல் திருமணம் தான்.. ஆனா இது மட்டும் நடந்ததில்லை - நடிகை ஓபன் டாக்!

நடிகை பதில்

இந்நிலையில், அவர், "விவேக் மற்றும் சரண் இருவரும் கட்டாயப்படுத்தி தான் நடிக்கவைத்தனர். படிப்பு முக்கியம் என எனக்கு தோன்றியதால் நான் அதில் மட்டும் அதன் பிறகு கவனம் செலுத்த தொடங்கிவிட்டேன். எனது குடும்பம் சினிமா பின்னணி கொண்டதில்லை, எல்லோரும் டாக்டர்கள் தான்.

kadhal-mannan-maanu-opened-about-carreer

என் தாத்தா அசாம் மாநிலத்தின் முதல் முதலமைச்சர் கோபிநாத் பர்டோலி. நான் படிக்க தான் சென்னைக்கு வந்தேன். பள்ளி படிக்கும்போதே கட்டாயப்படுத்தி காதல் மன்னன் படத்தில் நடிக்க வைத்தனர். அந்த படத்திற்கு பிறகு முழுவதும் படிப்பில் கவனம் செலுத்தினேன். என் கணவரும் தற்போது டாக்டராக தான் இருக்கிறார்" என்று கூறியுள்ளார்.