ரஜினி மகளை தொடர்ந்து கணவரை பிரியும் பிரபல நடிகரின் மகள்? - சோகத்தில் ரசிகர்கள்
தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து நடிகர் சிரஞ்சீவியின் மகள் தனது கணவரின் பெயரை நீக்கியுள்ளது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களில் சமந்தா-நாகசைத்தன்யா, டி.இமான்-மோனிகா ரிச்சர்ட் தம்பதியினர் விவாகரத்து பெற்றது திரையுலகினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதி பிரிவதாக தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2004 ஆம் ஆண்டு ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவிற்கும் , தனுஷூக்கும் திருமணம் நடந்தது. காதல் திருமணம் செய்துக் கொண்ட இந்த தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் இருக்கின்றனர். இவர்களின் 18 ஆண்டுகால மண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டாரும், நடிகர் ரஜினியின் நெருங்கிய நண்பருமான சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா தனது கணவரை பிரியப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சமந்தா விவாகரத்து செய்வதற்கு முன்பு சமூகத்தளங்களில் தனது பெயருக்கு பின்னால் இருக்கும் தனது கணவரின் பெயரை நீங்கினார். அதைவைத்துதான் இவர்கள் விவாகரத்து செய்யப்போகிறார்கள் என்ற பேச்சு தொடங்கியது. அந்த வகையில் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜாவும் அவரது கணவர் கல்யாண் தேவ் பெயரை நீக்கியுள்ளார். இதனால் இவர்கள் பிரிய வாய்ப்புள்ளதாக சமூகத்தளத்தில் செய்திகள் பரவத் தொடங்கியுள்ளது.
கடந்த 2016 ஆண்டு சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா நடிகர் கல்யாண் தேவ் என்பவரை திருமணம் செய்தார். இருவருக்கும் ஒரு பெண்குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.