17 வயதில் திருமணம் அப்போவே விவாகரத்து.. வீடு வீடா போனேன் - நடிகை ரேகா நாயர்!
நடிகை ரேகா நாயர் தனது வாழ்வில் நடந்த சோகங்கள் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளனர்.
ரேகா நாயர்
தமிழ் சினிமாவின் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ரேகா நாயர். இவர் இந்த படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்ததால் பல விமர்சனங்களுக்கு உள்ளனர்.
அவர் நடித்தது குறித்து பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் விமர்சனம் செய்தார். அதன்பின்னர், கடற்கரையில் அவர் வாக்கிங் செல்லும்பொழுது அவரிடம் தகராறில் ஈடுபட்டார். அதன்மூலம் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆனார். இவர் தொடர்ந்து பேட்டிகளில் பெண்களை குறித்து தவறாக பேசி வருகிறார்.
மனம் திறந்த நடிகை
இந்நிலையில், அவர் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது வாழ்க்கை பற்றி பேசியுள்ளார். அதில் அவர், "நான் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டு இருக்கும் போது, எனது 17வயதில் எனக்கு திருமணம் நடந்தது. திருமணம் நடந்த வேகத்திலேயே எனக்கு விவாகரத்தும் நடந்துவிட்டது. என் குடும்பத்தில் ஏக்கர் கணக்கில் நிலம் இருந்தும், குடும்பம் நடத்துவது சிரமமாகவே இருந்தது.
இதனால், வீடு வீடா சென்று பேப்பர் போட்டு இருக்கிறேன். எனக்கு 10பவுனோ, 5 பவுனோ இல்லை இரண்டு பவுன் நகை போட்டு கல்யாணம் செய்துவைக்க முடியாது சூழ்நிலை.
நிலத்தை விற்று கல்யாணம் செய்யணுமா, அதற்குபின் அம்மா அப்பா என்ன செய்வார்கள் என்று யோசித்தேன். என் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் நடந்து முடிந்தது, அதன் பிறகு இரண்டாவது கல்யாணம் பண்ணேன்" என்று கூறியுள்ளார்.