முதுகு வலியால் கஷ்டப்படுறீங்களா? இதை மட்டும் செஞ்சு பாருங்க - ஆய்வு தகவல்!

Back Pain Exercises
By Sumathi Jun 27, 2024 08:26 AM GMT
Report

முதுகு வலி குறித்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

 முதுகு வலி

பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சனை கீழ் முதுகு வலி. இதற்கு உடல் பருமன் மற்றும் நீண்ட நேரம் அமர்ந்திருந்து வேலை பார்ப்பது ஆகியவை முக்கிய காரணமாக உள்ளது.

back pain

இந்நிலையில், நடைபயிற்சி போன்ற அடிப்படை உடற்பயிற்சிகளே முதுகுவலி பிரச்சனையை குறைக்க உதவும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.

மூட்டு வலி, கை - கால் வலியால் அவதியா?  வலி பறந்து போக இந்த கீரையை தொடர்ந்து சாப்பிடுங்க!

மூட்டு வலி, கை - கால் வலியால் அவதியா? வலி பறந்து போக இந்த கீரையை தொடர்ந்து சாப்பிடுங்க!

நடைபயிற்சி 

ஆஸ்திரேலியா, மக்வாரி பல்கலைக்கழக ஆராய்ச்சிகாளர்கள் முதுகு வலி நோயாளிகளை மூன்று குழுக்களாக பிரித்து, முதல் குழுவினரை நாள்தோறும் நடைபயிற்சி மேள்கொள்ள வைத்தனர். மற்றொரு குழுவினரை பிசியோதெரபி எடுக்க வைத்தனர். மற்றவர்கள் எதையும் செய்யாதவர்கள் என்று பிரிக்கப்பட்டனர்.

முதுகு வலியால் கஷ்டப்படுறீங்களா? இதை மட்டும் செஞ்சு பாருங்க - ஆய்வு தகவல்! | Regular Walk Can Reduce Lower Back Pain

இதில், தினசரி நடைபயிற்சி மேற்கொள்ளும் குழுவில் இருந்த 700 பேர் முதுகு வலியில் இருந்து விடுபட்டது தெரியவந்தது. எனவே, நடைபயிற்சி என்பது செலவே இல்லாமல், எளிதாக செய்யக்கூடிய ஒரு விஷயம்.

தசைகளை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளவும், உடலைப் பலப்படுத்தவும் மிகவும் உதவியாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.