எலும்புகளை வலுவிழக்க செய்யும் விட்டமின் D குறைபாட்டை தீர்க்கும் உணவுகள்!
ஒவ்வொரு வைட்டமின் உடலுக்கு மிகவும் அவசியமானது. மற்ற வைட்டமின்கள் உடலுக்குத் தேவையானதைப் போலவே, வைட்டமின் டி ஊட்டசத்தும் நம் உடலுக்கு மிக முக்கியமானதாகும்.
வைட்டமின் டி குறைபாடு காரணமாக எலும்புகள் பலவீனமடைந்து போகும். இதனால், மூட்டு வலி, முதுகு வலி மற்றும் தசை வலி ஆகியவை ஏற்படும். விட்டமின் டி சத்து மிகவும் குறைந்தால், கீல்வாதம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற கடுமையான நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
எனவே, உடலில் வைட்டமின் டி குறைபாடு இல்லாமல் பார்த்துக் கொள்ள அவசியம். வைட்டமின் டி குறைபாடு ஏன் உருவாகிறது? துரித உணவு மற்றும் தவறான வாழ்க்கை முறையால் வைட்டமின் டி குறைபாடு ஏற்படுகிறது.
சூரிய ஒளி வைட்டமின் டிக்கான முக்கிய ஆதாரமாக உள்ளது. ஆனால் சூரிய ஒளியைத் தவிர சிறந்த ஆதாரங்களாகக் கருதப்படும் சில உணவுப் பொருட்கள்தான்.
வைட்டமின் டி குறைபாட்டின் ஏற்படும் அறிகுறிகள் -
உடல் எப்போதும் சோர்வாக இருக்கும்
எலும்பு மற்றும் முதுகு வலி
ஆறாத காயம்
மன அழுத்தம்
முடி உதிர்தல்
வைட்டமின் டி நிறைந்த உணவுகளைப் பற்றி பார்ப்போம் -
முட்டை:
முட்டைகளில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அதில், புரதம், வைட்டமின் டி, கால்சியம் மற்றும் பல வகையான தாதுக்கள் இருக்கிறது. வைட்டமின் டி குறைபாட்டை நீக்க, முட்டையை காலை உணவில் சேர்த்துக் கொள்வது மிகச் சிறந்தது.
பால்:
குழந்தை பருவத்திலிருந்தே பால் மிகவும் முக்கிய உணவு. ஏனெனில் பாலில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்திருக்கிறது. வைட்டமின் டி குறைபாட்டைச் சமாளிக்க பால் உதவி செய்கிறது.
கீரை:
கீரையில் புரதம் மற்றும் வைட்டமின் டி நிறைந்திருக்கிறது. இதை உட்கொள்வதன் மூலம், உடலில் உள்ள வைட்டமின் டி குறைபாட்டுடன் பல ஊட்டச்சத்துக்களின் பற்றாக்குறையும் பூர்த்தி செய்யப்படுகிறது.
பன்னீர் :
பாலில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீர் வைட்டமின் டி மற்றும் கால்சியம் நிறைந்த உணவு. இது எலும்புகள் மற்றும் தசைகளை வலுப்படுத்தும். இதனைத்தொடர்ந்து உட்கொண்டால், பல நோய்களைத் தவிர்த்து விடலாம்.
சோயாபீன்:
சோயாபீனில் புரதம், கால்சியம், வைட்டமின் டி, ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், இரும்பு, வைட்டமின் பி, துத்தநாகம், ஃபோலேட், செலினியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. இது எலும்புகளை வலுப்படுத்தி ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கும்.