ஒரே குடியிருப்பு தான்; 21 ஆயிரம் பேர் வசிக்குறாங்க.. எங்கே தெரியுமா?
21000 பேர் வசிக்கும் பிரம்மாண்ட பங்களா குறித்து தெரியுமா?
ரீஜண்ட் இன்டர்நேஷனல்
சீனா, ஹாங்சோவில் உள்ள கியான்ஜியாங் செஞ்சுரி சிட்டியில், ரீஜண்ட் இன்டர்நேஷனல் அபார்ட்மென்ட் ஒன்று உள்ளது. இந்த 36 மாடி கட்டிடம் 2013 இல் திறக்கப்பட்டது.
S வடிவத்தில் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டிடத்தில் மொத்தம் 30,000 பேர் வாழ்கின்றனர். இந்த அபார்ட்மெண்ட் ஒரு காலத்தில் ஹோட்டலாக இருந்தது. இந்த கட்டிடம் 206 மீட்டர் உயரம் கொண்டது.
இதில், ஒரு பெரிய உணவு விடுதி உள்ளது. நீச்சல் குளம், முடிதிருத்தும் கடை, சலூன், பல்பொருள் அங்காடி மற்றும் இணைய தள மையம் ஆகியவையும் உள்ளன. இங்கு பெரும்பான்மையாக இளைஞர்கள் இருக்கிறார்கள்.
பிரம்மாண்ட பங்களா
ஜன்னல்கள் இல்லாத சிறிய அடுக்குமாடி வீடுகளுக்கு வழக்கமாக மாதத்திற்கு 210 டாலர் செலவாகும். இந்திய மதிப்பில் 17,495 ரூபாய். பால்கனிகளுடன் கூடிய பெரிய வீடுகளுக்கு வாடகையா மாதம் 570 டாலர் செலவாகும். இந்திய மதிப்பில் 47,486 ரூபாய். அதே போல கனிசமான அளவில் சிறு வணிகர்களும் இருக்கிறார்கள்.
தற்போது, இந்தக் கட்டிடம் தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
முதலில் ஆறு நட்சத்திர ஹோட்டலாக இருக்க வேண்டும் என்று கட்டப்பட்ட கட்டிடம், குடியிருப்பு பகுதியாக மாறிவிட்டது குறிப்பிடத்தக்கது.