அடேங்கப்பா.. ரூ.491 கோடி செலவு, அரண்மனையில் பிரம்மாண்ட திருமணம் - யாருக்கு தெரியுமா?
ரூ.491 கோடி செலவில் திருமணம் நிகழ்ச்சி ஒன்று கோலாகலமாக நடைபெற்றுள்ளது.
நூற்றாண்டின் திருமணம்
அமெரிக்காவின் டெக்சாஸை சேர்ந்த தொழில்முனைவோர் மெடலைன் ப்ரோக்வே(26). இவரது தந்தை ராபர்ட் பாப் ப்ரோக்வே, பில் உஸ்லேரி மோட்டார்ஸின் தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரியாக பணியாற்றுகிறார்.
இந்நிறுவனம் புளோரிடாவின் கோரல் கேபிள்ஸ் மற்றும் கட்லர் பே ஆகிய இடங்களில் மெர்சிடிஸ் பென்ஸ் கார் டீலர் ஷிப்களை நடத்தி வருகிறது. இவர் தனது மகள் திருமணத்தை மிக ஆடம்பரமாக நடத்த விரும்பினார்.
வைரல் வீடியோ
தொடர்ந்து, மெடலைன் ப்ரோக்வே-ஜேக்கப் லாக்ரோன் ஜோடியின் திருமணத்திற்காக பாரீஸில் உள்ள புகழ்பெற்ற வெர்சாய்ஸ் அரண்மனையின் ஒரு பகுதியை வாடகைக்கு எடுத்தார்.
விருந்தினர்கள் தனிப்பட்ட விமானங்களில் பாரிஸூக்கு அழைத்து வரப்பட்டனர். பிரபல இசைக்குழுவான மரூன் 5-ன் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த திருமண விழாவின் வீடியோக்கள் மற்றும் படங்கள் வெளியாகி வைரலானது. இந்த திருமணம் ரூ.491 கோடி செலவில் நடைபெற்றுள்ளது. இவர்களது திருமணத்தை இந்த நூற்றாண்டின் திருமணம் என்று குறிப்பிடுகிறார்கள்.