மனைவியின் ரீல்ஸ் மோகம்.. குழந்தைகளின் கண் முன்னே கணவன் செய்த கொடூர செயல் - பகீர் பின்னணி!
குழந்தைகளின் கண் முன்னே மனைவியைக் கழுத்தை அறுத்து கணவன் கொலைச் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேச மாநிலம், மீரட்டத்தை சேர்ந்தவர் ராஜு -சீமா தம்பதியினர். இந்த தம்பதிக்கு வன்ஷிகா, அன்ஷிகா, பிரியான்ஷ் என்ற மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். திருமண வாழ்க்கையில் கணவன் மனைவிக்கு இடையே நிறையக் கருத்துவேறுபாடுகள் இருந்து வந்துள்ளன.
குறிப்பாக, ராஜுவுக்கு சீமாவின் நடத்தை மீது நிறையச் சந்தேகம் இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த சுழலில், சீமாவுக்கு ரீல்ஸ் பதிவிடுவதில் ஆர்வம் அதிகமாக இருந்துள்ளது.இதனால் அதிக ரீல்ஸ்கள் போடத் தொடங்கியுள்ளார்.
இந்த வீடியோ வரலானதைத் தொடர்ந்து தெரியாத எண்ணில் இருந்ததெல்லாம் சீமாவுக்கு போன்கள் வந்துள்ளன. இதனால் ஆத்திரமடைந்த ராஜு சீமாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று, கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கொலை
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரத்தில் ராஜு, சீமாவை செங்கல்லால் சரமாரியாக தாக்கியதில் சீமா மயங்கி விழுந்து சரிந்துவிட்டார்.அப்போது தனது 3 குழந்தைகளைத் தூங்காமல் தலையணை இடைவெளியில் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அதன் பின்னர் தனது மனைவியைக் கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொன்றுள்ளார்.
இதனையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் சீமாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம், தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.