அந்தரங்க வீடியோ எடுத்து மிரட்டிய காதலன்.. ஆத்திரத்தில் அந்தரங்க உறுப்பை வெட்டிய காதலி - பகீர்!

Sexual harassment India West Bengal Crime
By Vidhya Senthil Dec 11, 2024 09:00 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

காதலியை மிரட்டியதால் ஆத்திரத்தில் காதலனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காதலி

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவை சேர்ந்தவர் அப்துர் ரஹ்மான் அதே பகுதியைச் சேர்ந்த சௌமியா கதூன் என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதனால் அடிக்கடி இருவரும் வெளியில் சேர்ந்து சென்று நேரத்தைச் செலவிட்டனர். அப்போது புகைப்படத்தை எடுத்துக் கொண்டதாகத் தெரிகிறது.

காதலனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய காதலி

இதனையடுத்து அப்துர் ரஹ்மான் இந்த புகைப்படத்தைப் பயன்படுத்தி காதலியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று தனது காதலன் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதால், சௌமியா கதூன் மிகவும் கோபமடைந்துள்ளார்.

பள்ளி மாணவி பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை - ஒருதலை காதலால் நேர்ந்த கொடூரம்!

பள்ளி மாணவி பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை - ஒருதலை காதலால் நேர்ந்த கொடூரம்!

இதனால் ஆத்திரமடைந்த அவர் காதலனை அழைத்து மரத்தில் கட்டி வைத்து அந்தரங்க உறுப்பை துண்டித்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் அப்துர் ரஹ்மானை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 அந்தரங்க உறுப்பு

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் சௌமியா கதூனை கைது செய்து விசாரணை நடத்தினர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் இருவரும் 2018 ஆம் ஆண்டு முதல் காதலித்து  வந்துள்ளனர் .

காதலனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய காதலி

இந்த நிலையில், சௌமியா தனது காதலனைத் திருமணம் செய்ய விரும்பினார்,ஆனால் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றது தெரியவந்தது.