பள்ளி மாணவி பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை - ஒருதலை காதலால் நேர்ந்த கொடூரம்!
பள்ளி மாணவியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளி மாணவி
ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராகவேந்திரா. வேலை ஏதும் இல்லாமல் சும்மா ஊர் சுற்றிவந்துள்ளார். இந்த நிலையில் அதேபகுதியைச் சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் மாணவியை ஒரு தலையாகக் காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று ராகவேந்திரா அந்த மாணவியிடம் தனது காதலை ஏற்குமாறு வற்புறுத்தியுள்ளார்.இதற்கு அந்த மாணவி மறுத்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராகவேந்திரா ஒரு பாட்டிலில் பெட்ரோலை எடுத்துக்கொண்டு மாணவியின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போது மாணவியின் பெற்றோர் வெளியில் சென்றிருந்த நிலையில் தனியாக இருந்த மாணவியிடம் மீண்டும் தனது காதலை ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார்.ஆனால் அப்போதும் மாணவி அவரது காதலை ஏற்க மறுத்துள்ளார்.
ஒரு தலை காதல்
இதனையடுத்து கோவத்தின் உச்சியிலிருந்த ராகவேந்திரா தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து மாணவி மீது ஊற்றி தீ வைத்திருக்கிறார். அப்போது , தீ உடல் முழுவதும் வேகமாகப் பரவி மாணவி வலியால் கதறியுள்ளார்.
கதறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மாணவி எரிந்த நிலையில் உடல் கருகி உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் அருகில் ராகவேந்திரா தீக்காயங்களுடன் கிடந்தார். மேலும் இந்த சம்பவம் குறித்துக் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் ராகவேந்திராவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.