கண் கை கால்களை கட்டி.. ரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞர் - மனதை உலுக்கும் கொடூரம்!
கொடூரமான முறையில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இளைஞர்
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன்.இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.இவர் கடந்த 3 தினங்களுக்கு முன்பிலிருந்து காணவில்லை எனக் காவல் நிலையத்தில் அவரது தந்தை அழகன் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தோமையார் புரம் பகுதியில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாகத் தகவல் வந்தது. உடனடியாக காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்த போது அது பாலமுருகன் என்பது தெரியவந்தது.
கொடூர கொலை
அவரின் கை, கால் ,வாய் உள்ளிட்டவை கட்டப்பட்டு கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பாலமுருகன் சடலமாகக் கிடந்த இடத்தில் தடயவியல் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து பாலமுருகன் முன்பகை காரணமாகக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது கடத்தி கொலை செய்யப்பட்டாரா என உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.