இரவில் செல்போன் அழைப்பு.. மாணவிகளுக்குத் பாலியல் வன்கொடுமை பேராசிரியர் - சிக்கியது எப்படி?
கல்லூரி மாணவிகளுக்குத் தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பந்தம் பட்டியில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் அருள்செல்வம் என்பவர் தமிழ் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியர்களை செல்போனில் படம் பிடித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து முதல்வரின் தனிப் பிரிவு மாவட்ட நிர்வாகம் மதுரை மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநருக்கும் புகார் அளிக்கப்பட்டது.இது தொடர்பாக உடனடி விசாரணை நடத்தப்பட்டது. அதில் தமிழ்ப் பேராசிரியர் அருள்செல்வம் மீதான புகார்கள் உறுதிசெய்யப்பட்டது.
பாலியல் வன்கொடுமை
இதனையடுத்து, இதையடுத்து பேராசிரியர் அருள்செல்வத்தை பணியிடை நீக்கம் செய்து கல்லூரி முதல்வர் கீதா உத்தரவிட்டார். முன்னதாக கடந்த சில வருடங்களுக்கு முன் இதே கல்லூரியில் பணியாற்றிய தமிழ்ப் பேராசிரியர் பாலா என்பவர் மீதும் இதே பாலியல் வன்கொடுமை புகார் அளிக்கப்பட்டது.
அதன்பிறகு தற்போது அதே துறையில் பணியாற்றும் பேராசிரியர் அருள்செல்வம் மீதும் பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.