இந்த 4 மாவட்டங்களுக்கும் ரெட் அலெர்ட் தொடரும்; மூழ்கடித்த வெள்ளம் - முக்கிய அறிவிப்பு!
4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அதி கனமழை
தென் மாவட்டங்களான, தென்காசியில் 60%, தூத்துக்குடியில் 80% இயல்பைவிட கூடுதல் மழை பொழிந்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்,
மேலடுக்கு சுழற்சி காரணமாகவே அதிக கனமழைதான் பெய்துள்ளது, ஆனால் அதே நேரத்தில் இது மேகவெடிப்பு அல்ல. 90 செ.மீ மழை பெய்யும் என குறிப்பிட்டுச் சொல்ல முடியாது.
ரெட் அலெர்ட்
ரெட் அலர்ட் என்றால் 21 செ.மீ அளவுக்கு மேல், எவ்வளவு வேண்டுமானாலும் மழை பெய்யலாம். மேலடுக்கு சுழற்சி காரணமாக இவ்வளவு மழை பெய்தது இதுவே முதன்முறை. அடுத்த 24 மணி நேரத்துக்கு குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் தொடர்கிறது.
டிச.19 (நாளை) குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 39 இடங்களில் அதி கனமழையும், 33 இடங்களில் மிக கனமழையும், 12 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 95 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இனிவருங்காலங்களில் வட கிழக்குப் பருவமழையின்போது இதுபோன்ற தீவிர மழைப்பொழிவு நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளார்.