கனமழை - வெள்ள பாதிப்பு..! நெல்லை விரையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!
வரலாறு காணாத கன மழையின் காரணமாக தென்தமிழகத்தின் 4 மாவட்டங்கள் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளன.
நெல்லை விரையும் உதயநிதி
இடைவிடாது இரண்டு நாட்களுக்கு பெய்த மழையின் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி போன்ற மாவட்டங்கள் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளன.
மீட்புப்பணிகளில் தற்போது அரசு மும்முரம் காட்டி வரும் நிலையில், மாவட்டங்களின் அநேக இடங்கள் வெள்ள நீரில் மூழ்கி முற்றிலுமாக மக்களின் இயல்பு வாழ்க்கையை முடங்கியுள்ளது.
இன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் அரசு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், வெள்ள பாதிப்பு சேதங்களை பார்வையிட தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நெல்லை விரைந்துள்ளார்.