தென்மாவட்ட மழை..!! கழகத் தோழர்கள் - களத்தில் ஈடுபடுக..! முக ஸ்டாலின் அறிவுறுத்தல்

M K Stalin Tamil nadu Thoothukudi Tirunelveli
By Karthick Dec 18, 2023 06:05 AM GMT
Report

கன்னியாகுமரி , திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் கனமழையின் காரணமாக கடும் சிரமங்களை சந்தித்துள்ளது.

கனமழை

ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளதால் தென்தமிழகத்தின் 4 மாவட்டங்கள் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகியவை கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளது.

mk-stalin-advises-party-workers-to-help-in-flood-

அரசு மீட்புப்பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அரசின் தலைமை செயலாளர் ஷிவதாஸ் மீனா, மீட்புப்பணிகளை மேற்கொள்ள முப்படைகளின் உதவிகளை அரசு கோரியுள்ளதாக தெரிவித்தார்.

முக ஸ்டாலின் அறிவுறுத்தல் 

இந்நிலையில், இது குறித்து கட்சி தொண்டர்களுக்கு தமிழக முதல்வரும் - திமுக தலைவருமான முக ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,அதி கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களின் நிலை குறித்து நேற்று முதல் அமைச்சர்களுடனும் அரசு உயர் அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசியும் - மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைக் கண்காணித்துக் கொண்டும் இருக்கிறேன்.

mk-stalin-advises-party-workers-to-help-in-flood-

மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த கழகத் தோழர்கள், உடனடியாகக் களத்தில் பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் என்றும் - நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்குத் துணை நிற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளேன்.