மாமியார், மருமகளுக்குள் அடிக்கடி சண்டை - இதுதான் காரணமே!

Marriage
By Sumathi Oct 23, 2024 01:45 PM GMT
Report

மாமியார்-மருமகளுக்கு இடையேயான சண்டை மட்டும் இன்றளவும் முடிவுக்கு வந்தபாடில்லை..

மாமியார்-மருமகள் சண்டை

மாமியார் மற்றும் மருமகளுக்கு இடையே தலைமுறைகளின் இடைவெளி இருப்பதால், அவர்களின் எண்ணங்கள், வாழ்க்கை முறை மற்றும் மதிப்புகளில் பெரிய வித்தியாசம் உள்ளது. இது பரஸ்பர கருத்து வேறுபாடுகளை அதிகரிக்கக்கூடும்.

மாமியார், மருமகளுக்குள் அடிக்கடி சண்டை - இதுதான் காரணமே! | Reasons Mother In Law And Daughter In Law Fights

வீட்டில் பல நேரங்களில் மாமியார் அனைத்து முடிவுகளையும் தானே எடுக்க விரும்புகிறார். மருமகளும் தனது கருத்தைச் சொல்ல விரும்புகிறார். வீட்டில் தனது சுதந்திரத்தையும் உரிமைகளையும் மருமகள் உணராதபோது அங்கு சண்டை வெடிக்கிறது.

உறவினர்கள் அல்லது நண்பர்கள் மாமியார்-மருமகள் உறவில் தலையிடுவதும் பெரும்பாலும் சண்டையைத் தூண்டுகிறது.

நள்ளிரவில் சூடா டீ கேட்ட மாமியார் - அடித்தே கொன்ற மருமகள்!

நள்ளிரவில் சூடா டீ கேட்ட மாமியார் - அடித்தே கொன்ற மருமகள்!

திருமணத்திற்குப் பிறகு, வீட்டில் மருமகளுக்குப் புதிய பங்கு மற்றும் பொறுப்புகள் வருகின்றன, இதனால் மாமியாரின் பங்கில் மாற்றம் ஏற்படலாம். இது இருவருக்கும் இடையே சண்டைக்கு வழிவகுக்கிறது.

மாமியார், மருமகளுக்குள் அடிக்கடி சண்டை - இதுதான் காரணமே! | Reasons Mother In Law And Daughter In Law Fights

மாமியார் மருமகள் தனக்கு ஏற்றவாறு செயல்படுவார் என்று எதிர்பார்க்கையில், மருமகள் தனது வாழ்க்கையைத் தனது சொந்த வழியில் வாழ விரும்புகிறார். இரு தரப்பினரின் எதிர்பார்ப்புகளும் பூர்த்தி செய்யப்படாதபோது பிரச்சனையில் முடிகிறது.

சரியான தொடர்பு, பரஸ்பர மரியாதை மற்றும் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதன் மூலம் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.