இதுதான் நடிகை மீனாவின் கணவர் இறப்புக்கு காரணமா? உறவினர்களின் அதிர்ச்சி தகவல்!

Meena COVID-19 Tamil Cinema Tamil nadu
1 மாதம் முன்

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நிலை குறித்த அவரது உறவினர்கள் அளித்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை மீனா

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நிலை குறித்த அவரது உறவினர்கள் அளித்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர், இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

meena

வித்யாசாகருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்த நிலையில் திடீரென அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து அவர் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் ஒரு மாதம் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

கணவர் வித்யாசாகர்

மேலும் நுரையீரல் செயல்படாமல் எக்மோ சிகிச்சையில் இருந்துள்ளார். வித்யாசாகர், பின்னர் எம்ஜிஎம் மருத்துவமனையில் ஒரு வாரம் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று இரவு 9.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதுதான் நடிகை மீனாவின் கணவர் இறப்புக்கு காரணமா? உறவினர்களின் அதிர்ச்சி தகவல்! | Reason Of Meena Husband Vidhyasagar Death

இதுக்குறித்து அவரது உறவினர்கள் வட்டாரத்தில் கேட்டபோது, வித்யாசாகருக்கு ஏற்கெனவே நுரையீரல் பாதிப்பு அவருக்கு இருந்தது. அது இரண்டு நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய அளவுக்குப் பாதிப்பை உண்டாக்கக் கூடிய பிரச்னை.

நுரையீரல் பிரச்னை

அதாவது புறாக்களின் எச்சம் கலந்த காற்றைச் சுவாசிக்கிற போது உண்டாகக் கூடிய நோய். பெங்களூருவில் அவருடைய வீட்டுக்கு அருகே நிறைய புறாக்கள் வளர்க்கப்பட்டு வந்துள்ளது. அதனால் அலர்ஜி ஏற்பட்டு அவருக்கு சுவாசப் பிரச்னை ஏற்பட்டது.

ஏற்கெனவே இந்தப் பாதிப்பு இருந்த நிலையில் கொரோனா வைரஸாலும் அவர் பாதிக்கப்பட்டார். இதனால் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானது. இதனால் சென்னை ஆழ்வார்பேட்டையில உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அதிர்ச்சி தகவல்

ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நாளுக்கு நாள் அவரது உடல்நிலை மோசமடைந்து இன்று இறந்துட்டார் என்று தெரிவித்தனர். இந்த சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மீனா சமீபகாலமாக சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். அவ்வப்போது தன்னைப் பற்றிய புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில் மீனா தனது முதல் ஹீரோ ராஜேந்திர பிரசாத்துடன்

ஒரு புதிய படத்திற்காக மீண்டும் இணைந்திருப்பதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். படத்தில் அவர் இருவரும் ஒரு வயதான தம்பதியை சித்தரித்து வெளியிட்டிருந்தார்.

நடிகை பாலியல் புகார்.. நடிகருக்கு ஆண்மை சோதனை!

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.