இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் பிப்ரவரி இறுதியில் உச்சத்தை அடையும் - நிபுணர்கள் எச்சரிக்கை

india corona Warning Experts omicron
By Nandhini Dec 19, 2021 03:37 AM GMT
Report

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல் பிப்ரவரி மாத இறுதியில் மிகுந்த உச்சத்தை அடையும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிரிட்டன் நாட்டில் ஒமைக்ரான் அதிவேகமாக பரவி வருகிறது. ஆனால், இந்தியாவில் அதன் பரவல் சற்று வேகம் குறைவாகத்தான் உள்ளது என்று ‌‌மத்திய அரசு அமைத்த கமிட்டியின் தலைவர் வித்யாசாகர் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து வித்யாசாகர் கூறியதாவது -

ஹைதராபாத் ஐஐடியில் பேராசிரியராக பணியாற்றி வரும் வித்யாசாகர், ஒமைக்ரான் தொற்று விவகாரத்தில் பிரிட்டனுடன், இந்தியாவை ஒப்பிட்டு பார்க்கும் போது எந்த வகையிலும் பொருத்தமாக இருக்காது.

குறுகிய காலத்திற்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கும் எம்ஆர்என்ஏ தடுப்பூசிகள்தான் பிரிட்டனில் அதிகமாக பயன்படுத்தப்படுவதாகவும், ஆனால், இந்தியாவில் அந்த வகை தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவில்லை.

இந்தியாவில் வரும் ஜனவரி மாதம் ஓமைக்ரானால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்து, பிப்ரவரி மாத இறுதியில் உச்சத்தை எட்டும். இதற்கிடையே ஒமைக்ரான் வைரஸ் லேசானது என்று நிராகரித்து விட முடியாது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருக்கிறது.

ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ நிலையை புரிந்து கொள்ள கூடுதல் தகவல்கள் தேவைப்படுகின்றன என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.