அமாவாசை நாளில் சமையலில் இந்த காய்கறி கட்டாயம் இருக்கணும் - ஏன் தெரியுமா?
அமாவாசை நாளில் சமையலில் வாழக்காய் சேர்ப்பதன் முக்கியத்துவம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
அமாவாசை
அமாவாசை நாளில் விரதம் இருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இப்படி செய்வதால் முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்றும் ,நமக்கு துணையாக இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும் வீட்டில் சுப காரிய தடைகள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.
அதிலும் அமாவாசை நாளில் சில வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதாவது, வீட்டின் வாசலில் கோலம் இடக்கூடாது . வீட்டில் சுப காரியங்கள் நடத்தக்கூடாது . தாய் தந்தை இருக்கும்பெண்கள் தலைக்கு குளிக்க கூடாது , சுமங்கலிகள் விரதம் இருக்கக் கூடாது போன்றைவை நடைமுறையில் உள்ளது.
தர்ப்பணம்
அதுபோல தான் அமாவாசை நாளில் கண்டிப்பாக சமைக்க வேண்டிய காய்கறிகள் மற்றும் சமைக்க கூடாத காய்கறிகள் என உண்டு. அப்படி அமாவாசை நாளில் தர்ப்பணம் கொடுக்கும் போதும் , தானம் வழங்கும் போதும் வாழைக்காய் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
இதற்க்கு காரணம் வாழையடி வாழையாக நம் குலம் வளர வேண்டும் என்பதற்காக இது பயன்படுத்தப்படுவதாக புராணங்களில் கூறப்படுகிறது.