அமாவாசை நடத்தும் ஆட்சியில் இப்படிப்பட்ட அவலங்கள் எல்லாம் நடைபெறுகிறது - செல்லுார் ராஜு

M K Stalin DMK AIADMK Sellur K. Raju
By Thahir May 29, 2023 11:50 AM GMT
Report

தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடு, கள்ளச்சாராய சாவுகள், கொலை, கொள்ளை போன்ற சட்ட ஒழுங்கு சீர்கேடுகளை கண்டித்து அதிமுக சார்பில் இன்று மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

முதலமைச்சர் வாரிசு அரசியலை நடத்தி வருகிறார் 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை உடனடியாக பதவி விலக வலியுறுத்தி மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில்,

அமாவாசை நடத்தும் ஆட்சியில் இப்படிப்பட்ட அவலங்கள் எல்லாம் நடைபெறுகிறது - செல்லுார் ராஜு | Nothing Good Happened During Stalin Rule

’’நாம் ஏதோ பாவம் செய்து விட்டோம். நன்றாக சென்று கொண்டிருந்த அதிமுக ஆட்சி போய் திமுக ஆட்சி வந்துவிட்டது என மக்கள் நினைக்கிறார்கள்.

அதிமுக ஆட்சி நடத்திய விதத்தை மத்திய அரசு, மத்திய அமைச்சர்கள், மக்கள் என எல்லோரும் பாராட்டினார்கள். ஆனால் முதலமைச்சர் ஸ்டாலினோ, தனக்கு தானே பாராட்டை நடத்திக்கொண்டு வாரிசு அரசியலை நடத்தி வருகிறார்.

ஒரு நல்லதும் நடக்கவில்லை 

கடந்த காலங்களில் அவர்கள் மத்தியில் ஆண்ட போது நடந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை கண்டு இந்தியா மட்டுமல்ல உலகமே வியந்தது. ஊழல் மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் என நம்மை மற்றவர்கள் ஒரு மாதிரியாக பார்த்தார்கள்.

திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் 10 லட்சம், கள்ளச்சாராயம் விற்றால் 50 ஆயிரம் கொடுக்கிறார்கள். அமாவாசை நடத்தும் ஆட்சியில் இப்படிப்பட்ட அவலங்கள் எல்லாம் நடைபெறுகிறது.

முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டிற்கு வருமானவரித்துறை அதிகாரிகள் சென்ற போது காபி கொடுத்து, உணவு கொடுத்து வரவேற்றார். ஆனால் செந்தில்பாலாஜியின் தம்பி வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சென்ற போது அடித்து மண்டையை உடைக்கிறார்கள். ஸ்டாலின் ஆட்சியில் நல்லது நடக்கும் என பார்த்தால் ஒரு நல்லதும் நடக்கவில்லை’’ என கடுமையாக விமர்சித்து பேசினார்.