ஆடி அமாவாசை தர்ப்பணம் செய்ய தடை - வெறிச்சோடிய பவானி கூடுதுறை!

empty aadi amavasai
By Anupriyamkumaresan Aug 08, 2021 09:46 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

ஈரோடு மாவட்டத்தில் கொரோனோ பரவல் காரணமாக காவிரி கரையோரங்களில் தர்ப்பணம் செய்யவும், கோவில்களில் தரிசனம் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்ட நிலையில், ஒரு சிலர் கால்வாய் பகுதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனோ பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

ஆடி அமாவாசை தர்ப்பணம் செய்ய தடை - வெறிச்சோடிய பவானி கூடுதுறை! | Aadi Amavasai Day Empty Roads Seas

குறிப்பாக, ஆடி மாதம் என்பதால் கோவில்களுக்கு தரிசனத்திற்காகவும், காவிரி கரையோரங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும் அதிகளவு பக்தர்கள், பொதுமக்கள் கூடுவார்கள்.

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு மாவட்ட கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்யவும், காவிரி ஆற்றங்கரையில் பொதுமக்கள் கூடவும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

இதன் காரணமாக, ஆடி அமாவாசை என்பதால் இன்று ஈரோடு மாவட்டத்தில் பவானி கூடுதுறை, கொடுமுடி, கருங்கல் பாளையம் காவிரி கரை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவிலான காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு, தர்ப்பணம் கொடுக்க வரும் பக்தர்களை அனுமதி இல்லை என்று கூறி திருப்பி அனுப்பி வைத்து வருகின்றனர்.

ஆடி அமாவாசை தர்ப்பணம் செய்ய தடை - வெறிச்சோடிய பவானி கூடுதுறை! | Aadi Amavasai Day Empty Roads Seas

இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் தர்ப்பணம் கொடுக்க வரும் காவிரி ஆற்றங்கரை ஓரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

மேலும், ஒரு சிலர் தங்களின் முன்னோர்களுக்கு காலிங்கராயன் கால்வாய் பகுதிகளில் முறைப்படி தர்ப்பணம் கொடுத்தும், அவற்றை கால்வாயில் விட்டும் வழிபட்டனர்.