தீவிரவாதிகள் மிரட்டல்; விராட் கோலியின் உயிருக்கு ஆபத்து? அணியின் பயிற்சி ரத்து!

Virat Kohli Royal Challengers Bangalore Gujarat IPL 2024
By Swetha May 22, 2024 12:38 PM GMT
Report

ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலிக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 விராட் கோலி 

நடப்பாண்டின் ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடரின் 68ம் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

தீவிரவாதிகள் மிரட்டல்; விராட் கோலியின் உயிருக்கு ஆபத்து? அணியின் பயிற்சி ரத்து! | Rcb Player Virat Kholi Gets Terrorist Intimidation

இந்த போட்டியில் ஆர்சிபி அணி 218 ரன்களை குவித்தது. மேலும் சென்னை அணியை தோற்கடித்தது பிளே ஆப் சுற்றுக்கு அபார வெற்றி பெற்று முன்னேறியது. இந்த சூழலில், பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான விராட் கோலிக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

விராட் கோலியின் உயிருக்கு அச்சுறுத்தல் விடப்பட்டு உள்ளதாக குஜராத் மாநில போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், குஜராத் போலீஸ் எச்சரிக்கையை அடுத்து அகமதாபாத் மைதானத்தில் நடக்க இருந்த பயிற்சியை ஆர்.சி.பி. அணி ரத்து செய்தது.

தப்பு பண்ணிட்டேன்; கோலி மனைவி குறித்து நான் கூறியது உண்மையல்ல - வருந்தும் டிவில்லியர்ஸ்

தப்பு பண்ணிட்டேன்; கோலி மனைவி குறித்து நான் கூறியது உண்மையல்ல - வருந்தும் டிவில்லியர்ஸ்

உயிருக்கு ஆபத்து?

விராட் கோலி உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக குஜராத் போலீஸ் எச்சரித்துள்ளதாக வங்கமொழி நாளிதழான ஆனந்த் பஜார் தகவல் தெரிவித்தனர். முன்னதாக 2 நாள்களுக்கு முன் அகமதாபாத் விமான நிலையத்தில் 4 பேரை குஜராத் மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு கைது செய்தது.

தீவிரவாதிகள் மிரட்டல்; விராட் கோலியின் உயிருக்கு ஆபத்து? அணியின் பயிற்சி ரத்து! | Rcb Player Virat Kholi Gets Terrorist Intimidation

பிளே ஆஃப் சுற்றில் பங்கேற்க ஐபிஎல் அணிகள் அகமதாபாத் வந்தபோது 4 பேரும் அங்கு பிடிபட்டுள்ளனர்.இது தொடர்பாக ஜராத் கிரிக்கெட் சங்கத்தின் கூறியதாவது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) இன்று அகமதாபாத்தில் நடந்த பயிற்சி கடுமையான வெப்ப அலை காரணமாக ரத்து செய்தது என்று குஜராத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

புதன்கிழமை திட்டமிடப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான முக்கியமான ஐபிஎல் எலிமினேட்டர் போட்டிக்கு தயாராகி வருகின்றனர். அகமதாபாத்தில் உள்ள கடுமையான வெப்பநிலை RCB அணி நிர்வாகத்தை பயிற்சியை விட வீரர்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என அவர்களது சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.