6 ஆண்டுகளுக்குப் பின் சரிவை சந்தித்த கோலி - ரசிகர்கள் அதிர்ச்சி!
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு 10வது இடத்திற்கும் கீழ் சரிந்திருக்கிறார் விராட் கோலி.
விராட் கோலி
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 11 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 20 ரன்களும் எடுத்து மிகப்பெரிய அளவில் ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்துள்ளார்.
இந்த மோசமான பேட்டிங்கிற்குக் கிடைத்தப் பரிசு தான் தரவரிசைப் பட்டியலில் பின்னடைவு. 10வது இடத்தில் இருந்த விராட் கோலி 13வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.
பின்னடைவு
பட்டோடி கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 9 இன்னிங்ஸ்களில் விராட் கோலி எடுத்துள்ள ரன்கள் வெறும் 249 மட்டுமே. சராசரியாக 27.66 ரன்களை எடுத்துள்ளார்.
இந்த ஆண்டில் மட்டும் என்று பார்த்தால் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 220 ரன்கள் மட்டும் எடுத்துள்ளார். கடந்த 2019ல் இருந்து தற்போது வரை அவர் எடுத்துள்ளது 872 ரன்கள் தான்.
கேப்டன்
இந்த ஆண்டில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடர் தவிர்த்து மற்ற எல்லா போட்டிகளிலும் சொற்ப ரன்களிலேயே அவுட்டாகியிருக்கிறார். ஆனால் டெஸ்ட் அணியின் கேப்டனாக இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தியிருக்கிறார்.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக 2017, 2018, 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி நம்பர் ஒன் இடத்தில் இருக்க விராட் கோலியின் தலைமையே காரணம்.
இந்திய அணி
இன்னும் குறிப்பிட்டு சொல்லப்போனால் 84 மாதங்கள் இந்திய அணியின் கேப்டனாக இருந்தார் விராட் கோலி. இந்த காலகட்டத்தில் முதல் 36 மாதங்களில் ஒரு தொடரில் கூட இந்திய அணி தோல்வி பெறவில்லை.
2018ம் ஆண்டில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக பெற்றதோல்வி தான் விராட் கோலி தலைமையிலான அணி பெற்ற முதல் தோல்வி. 2014 முதல் 2022 வரை 68 போட்டிகளில் 40 போட்டிகளில் வெற்றியைத் தேடித்தந்திருக்கிறார்.
கம்பேக்
பேட்டிங்கை எடுத்துக் கொண்டாலும் கூட சர்வதேச அளவில் சதங்களை விளாசிய ஆட்டக்காரர்களில் விராட் கோலி 70 சதங்களுடன் முன்னணியில் இருக்கிறார்.
இப்போது தூக்கி வைத்துக் கொண்டாடப்படும் ஜோ ரூட் 44 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். விராட் கோலிக்குத் தேவைப்படுவதெல்லாம் ஒரு நல்ல கம்பேக் மட்டுமே.
ஓய்வு அளிப்பதால் யாரும் ஃபார்முக்கு வரப்போவதில்லை - இர்பான் பதான் காட்டம்