தப்பு பண்ணிட்டேன்; கோலி மனைவி குறித்து நான் கூறியது உண்மையல்ல - வருந்தும் டிவில்லியர்ஸ்

Virat Kohli Cricket AB de Villiers Anushka Sharma
By Sumathi Feb 10, 2024 09:37 AM GMT
Report

விராட் கோலி தொடர்பாக தவறான தகவலை கூறிவிட்டதாக டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

விராட்- அனுஷ்கா

இந்தியா - இங்கிலாந்து இடையே நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் விராட் கோலி பங்கேற்கவில்லை. தற்போது, அவர் மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடமாட்டார் எனக் கூறப்படுகிறது.

virat kholi - anushka sharma

இதற்கிடையில், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும், விராட் கோலியின் நண்பருமான ஏபி டிவில்லியர்ஸ், "விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதியினருக்கு 2வது குழந்தை பிறக்க இருக்கிறது. அவர் நன்றாகத்தான் இருக்கிறார்.

அதிகாலை 3 மணி வரை குடிச்சோம்; மன்னிப்பு கேட்ட விராட் கோலி - சீக்ரெட் உடைத்த டீன் எல்கர்

அதிகாலை 3 மணி வரை குடிச்சோம்; மன்னிப்பு கேட்ட விராட் கோலி - சீக்ரெட் உடைத்த டீன் எல்கர்

டி வில்லியர்ஸ் வருத்தம்

இப்போது குடும்பத்துடன் நேரம் செலவளித்துக் கொண்டிருக்கிறார். அதனால்தான் விராட் கோலி டெஸ்ட் தொடரிலிருந்து விலகி இருக்கிறார். அவர் எடுத்திருப்பது சரியான முடிவுதான்" எனத் தெரிவித்திருந்தார். அந்த தகவல் சமூக வலைதளங்களில் படுவைரலானது.

தப்பு பண்ணிட்டேன்; கோலி மனைவி குறித்து நான் கூறியது உண்மையல்ல - வருந்தும் டிவில்லியர்ஸ் | Ab De Villiers False Info On Virat Kohli Anushka

இந்நிலையில் தற்போது, “நான் தவறு ஒன்றைச் செய்துவிட்டேன். விராட் கோலி குறித்து நான் கூறிய தகவல் உண்மையல்ல. அவரது விலகலுக்கான காரணம் யாருக்கும் தெரியாது. அவரது உடல்நலன் மற்றும் மனநலன் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இந்த இடைவெளிக்கான காரணம் எதுவாக இருந்தாலும், அவர் அதிலிருந்து வலுவாகவும், சிறப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் திரும்பி வருவார் என்று நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.