தோனியை வம்புக்கு இழுத்த RCB ரசிகர்கள்; CSK வீரர்கள் முன்பு அடாவடி ஆட்டம் - viral வீடியோ!
சிஎஸ்கே அணியை தோற்கடித்து ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு சென்றது.
RCB ரசிகர்கள்
நடப்பாண்டின் ஐபிஎல் சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தொடரின் 68ம் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
அதே போல இந்த ஆட்டத்தில் நடந்தவை குறித்து சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இரு அணிகளில் எந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெரும் என்ற இந்த முக்கியமான ஆட்டத்தில் நடந்த ஒவ்வொரு விஷயமும் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.
போட்டியில் ஆர்சிபி அணி நிர்ணயித்த 218 ரன்களை அடிக்கமுடியாமல் தடுமாறிய சிஎஸ்கே அணி படுத்தோல்வி அடைந்தது. போட்டியின் இறுதியில் டோனி வெற்றி பெற்ற ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமலேயே மைதானத்தை விட்டு வெளியேறியது, அவரது அட்டமிழப்பின் போது ஆர்சிபி வீரர்களின் ஆக்ரோஷ கொண்டாட்டங்கள் பெரும் சர்ச்சை ஆனது.
அடாவடி ஆட்டம்
இந்த நிலையில் மேலும் ஒரு வீடியோ தீயாய் பரவி வருகிறது. அதில் போட்டி முடிந்த பிறகு மைதானத்தில் இருந்து சிஎஸ்கே வீரர்கள் தங்களுடைய பேருந்தில் வெளியேறி இருக்கிறார்கள். அப்போது மைதானத்தில் வெளியே நின்று கொண்டிருந்த ஆர் சி பி ரசிகர்கள் பேருந்து முன் நின்று rcb என்று கத்தி இருக்கிறார்கள்.
மேலும் பல ரசிகர்கள் விராட் கோலியின் ஜெர்சியை காண்பித்து சிஎஸ்கே வீரர்களை பார்த்து வெறுப்பேற்றி இருக்கிறார்கள். மேலும் தோனி பேருந்து ஓரத்தில் அமர்ந்து கொண்டு இருந்தார். அப்போது தோனி இருந்த இடத்திற்கு முன்பு சில ரசிகர்கள் சுற்றிக்கொண்டு விராட் கோலியின் ஜெர்சியை காண்பித்து இருக்கிறார்கள்.
ஆனால் இதை அனைத்தையும் தோனி பொறுமையாக நோட் செய்து கொண்டார். அது மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த சிஎஸ்கே வீரர்களும் அதை அமைதியாக பார்த்து பேருந்தில் கடந்து சென்றனர். ஆர்சிபி ரசிகர்களின் இந்த அடாவடி ஆட்டத்தை பார்த்து நெட்டிசன்கள் அவர்களது ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர் .
Never forgive never forget??
— AnishCSK? (@TheAnishh) May 21, 2024
It’s a fan banter!!!
Still they did such cheap things to Csk staffs and players!!! Even after knowing a lot of indian players were there!!!??????
What can we expect from the brainless Harcb clowns!!!??? pic.twitter.com/BIMbheiiqL