பிளே ஆப்பிற்கு தான் தகுதி பெற்றீர்கள், கோப்பையை வென்றது போல்...விளாசிய கவுதம் கம்பீர்!

Virat Kohli Royal Challengers Bangalore IPL 2022 Gautam Gambhir IPL 2024
By Swetha May 20, 2024 01:30 PM GMT
Report

ஆர்சிபி அணி குறித்து சீசன் தொடங்குவதற்கு முன்பு கவுதம் கம்பீர் பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.

பிளே ஆப் 

நடப்பாண்டில் ஐபிஎல் சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தொடரின் 68ம் ஆட்டம் நேற்று முன் தினம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

பிளே ஆப்பிற்கு தான் தகுதி பெற்றீர்கள், கோப்பையை வென்றது போல்...விளாசிய கவுதம் கம்பீர்! | Gautham Gambhir Slams Rcb Attitude Went Viral

அதே போல இந்த ஆட்டத்தில் நடந்தவை குறித்து சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இரு அணிகளில் எந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெரும் என்ற இந்த முக்கியமான ஆட்டத்தில் நடந்த ஒவ்வொரு விஷயமும் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.

போட்டியில் முதலில் களமிறங்கி பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 218 ரன்களை நிர்ணயித்தது. அந்த இலக்கை சேஸ் செய்த சென்னை அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை மட்டுமே குவித்து படு தோல்வி அடைந்ததது .

ஒருவரை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடும் கலாச்சாரத்திலிருந்து இந்தியா வெளிவர வேண்டும் - கவுதம் கம்பீர் காட்டம்

ஒருவரை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடும் கலாச்சாரத்திலிருந்து இந்தியா வெளிவர வேண்டும் - கவுதம் கம்பீர் காட்டம்

கவுதம் கம்பீர்

ஆட்டத்தின் இறுதியில் டோனி வெற்றி பெற்ற ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமலேயே மைதானத்தை விட்டு வெளியேறியதே தற்போது நடந்துவரும் விவாதங்களுக்குக் காரணம். ஆர்சிபி வீரர்கள் வெற்றிக்களிப்பில் இருந்ததால் கை கொடுக்க சென்ற தோனி திடீரென திரும்பி டிரஸிங் அறைக்குச் சென்ற வீடியோ தீயாக பரவி வருகிறது.

பிளே ஆப்பிற்கு தான் தகுதி பெற்றீர்கள், கோப்பையை வென்றது போல்...விளாசிய கவுதம் கம்பீர்! | Gautham Gambhir Slams Rcb Attitude Went Viral

இந்த நிலையில், அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அதாவது டோனி கை கொடுக்க வந்தும் அவரைக் கண்டுகொள்ளாமல் ஆர்சிபி அணியினர் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்ததே இதற்கு காரணம் என்று பலர் கூறி வருகின்றனர்.

அந்த வகையில், ஆர்சிபி வீரர்கள் மற்றும் அணிகள் குறித்து தனது விமர்சனங்களை வெளிப்படையாக முன்வைக்கக்கூடிய கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான கவுதம் கம்பீர்,முன்க்கூட்டியே பேசிய பழைய வீடியோ ஒன்று பரவி வருகிறது.

அதில், சிஎஸ் கே அணி 5 முறை ஐபிஎல் வென்றிருந்தாலும் தாங்கள் பெரியவர்கள் என்ற ஆட்டிட்யூடான மனநிலை அவர்களிடம் இருக்காது.ஆனால் விராட் கோலியும் ஆர்சிபி அணியும் ஒரு லீக் போட்டி வென்றாலும், பிளே ஆப்பிற்கு தகுதிபெற்றாலும் கூட தாங்கள் கோப்பையை வென்றதுபோல் நடந்துகொவர்கள் என்று பேசியிருந்தார். 

You May Like This Video