ஒருவரை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடும் கலாச்சாரத்திலிருந்து இந்தியா வெளிவர வேண்டும் - கவுதம் கம்பீர் காட்டம்
முதலில் ஒருவரை மட்டும் ஹீரோவாக கொண்டாடும் கலாச்சாரத்திலிருந்து இந்தியா வெளிவர வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்
சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் விராட் கோலி சதம் அடித்தார். அவரை நாடே கொண்டாடி மகிழ்ந்தது. அப்போட்டியில், மீரட்டிலிருந்து வந்த புவனேஷ்வர் குமார் 5 விக்கெட்களை வீழ்த்தினார். ஆனால், அவரை பற்றி என்னைத் தவிர வேறு யாரும் பேசவில்லை. ஹீரோவாக ஒருவரை கொண்டாடுவதிலிருந்து இந்தியா வெளிவர வேண்டும்.
இதுதான் 1983ம் ஆண்டும் நடைபெற்றது. 2007 மற்றும் 2011ம் ஆண்டும் நடந்தது. இதற்கு காரணம் சமூகவலைதளம் தான். அதிகப்படியான பாலோவர்கள் இருந்தால் அதுவே ஒரு பிராண்டை உருவாக்குகிறது.
இந்தியா முதன்முதலில் உலகக் கோப்பையை வென்றபோது, எல்லாரும் கபில்தேவ்வை கொண்டாடினார்கள்.
2007 மற்றும் 2011ல் உலக்கோப்பை வென்றபோது தோனியை கொண்டாடினார்கள். இதை யார் உருவாக்கியது? வீரர்கள் கிடையாது. பிசிசிஐயும் இல்லை. செய்தி சேனல்களும், ஒளிபரப்பாளர்களும் இந்திய கிரிக்கெட் பற்றி எப்போதாவது பேசியதுண்டா? என்று தெரிவித்துள்ளார்.