இனி.. கிரெடிட் கார்டு வாங்குவதில் புதிய மாற்றம் - ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு!
இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
கிரெடிட் கார்டு
நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், ரிசர்வ் வங்கி பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு முறைகள் சட்டம் 2007ன் கீழ் புதிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
அதில், அட்டை வழங்கும் வங்கிகள் இனி வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கடன் அட்டை வலையமைப்புகளை திணிக்க முடியாது.
கிரெடிட் கார்டு பயனர்களுக்கு நெட்வொர்க்கைத் தேர்ந்தெடுக்கும் விருப்பத்தை அவர்கள் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. இந்த அறிவுறுத்தல் கிரெடிட் கார்டு பயனர்களுக்கும், உள்நாட்டு அட்டை நெட்வொர்க் ரூபேக்கும் பயனளிக்கும்.
ஆர்பிஐ அறிவிப்பு
பழைய வாடிக்கையாளர்கள் குறித்து ரிசர்வ் வங்கி, கார்டு புதுப்பிக்கும் போது நெட்வொர்க்கை தேர்வு செய்யலாம். தற்போது, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், டைனர்ஸ் கிளப், மாஸ்டர்கார்டு, விசா மற்றும் ரூபே ஆகியவை இந்தியாவில் அட்டை நெட்வொர்க்குகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
தற்போது இந்த ஏற்பாட்டின் மூலம் ரூபே நெட்வொர்க் பெரிதும் பயனடையலாம்.
RuPay கிரெடிட் கார்டு சமீபத்தில் UPI பணம் செலுத்தும் வசதியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.