உங்க ரூபாய் நோட்டுகளில் ஸ்டார் குறியீடு இருக்கா - ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு!

India
By Sumathi Jul 29, 2023 04:27 AM GMT
Report

ரூபாய் நோட்டுகளில் நட்சத்திர குறியீடு இருப்பது குறித்து ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது.

ரூபாய் நோட்டு

ஸ்டார் நோட் 2016-ல் புழக்கத்திற்கு வந்தது. நோட்டுகளை அச்சிடுவதை எளிதாக்கவும் செலவுகளைக் குறைக்கவும் ஸ்டார் நோட்டின் நாணயம் 2006-ல் தொடங்கப்பட்டது. 10 ரூபாய் என்று இல்லை,

உங்க ரூபாய் நோட்டுகளில் ஸ்டார் குறியீடு இருக்கா - ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு! | Rbi Clarification About Star Symbol Notes

100 ரூபாய் , 500 ரூபாய் , 200 ரூபாய் நோட்டுகளும் புதிய வடிவில் வந்ததால் அவை குறித்து அவ்வப்போது வதந்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில், இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

ஸ்டார் குறியீடு

"ரூபாய் நோட்டுகளின் சீரியல் நம்பர் பகுதியில் முன்னொட்டுக்கும் வரிசை எண்ணுக்கும் இடையில் ஒரு நட்சத்திரக் குறியீடு சேர்க்கப்பட்டிருக்கிறது. ரூபாய் நோட்டுகள் 100 நோட்டுகள் கொண்ட கட்டுகளாகவே வெளியிடப்படுகிறது. அவற்றில் வரிசையான எண்கள் கொண்ட நோட்டுகளாக இருக்கும்.

உங்க ரூபாய் நோட்டுகளில் ஸ்டார் குறியீடு இருக்கா - ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு! | Rbi Clarification About Star Symbol Notes

எனவே இப்படி அச்சிட்ட நோட்டுகளில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், அவற்றுக்கு மாறாக ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுகிறது. அப்படி அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளில் சீரியல் நம்பர் பகுதியில் நட்சத்திரக் குறியீடு சேர்க்கப்படும்.

ஸ்டார் குறியீடு உள்ள ரூபாய் நோட்டுகளும் மற்ற நோட்டுகளைப் போலவே இருக்கும். ஆனால் சீரியல் நம்பரில் முன்னொட்டுக்கும் வரிசை எண்ணுக்கும் இடையே ஸ்டார் குறியீடு சேர்க்கப்பட்டிருக்கும். நட்சத்திர (*) குறி கொண்ட ரூபாய் நோட்டுகளும் மற்ற சட்டப்பூர்வ ரூபாய் நோட்டுகளைப் போலவே செல்லுபடியாகும் என விளக்கம் அளித்துள்ளது.