இனி க்யூவில் நிற்க வேண்டாம்; UPI மூலம் வங்கி கணக்கில் பணம் - RBI அறிவிப்பு!
இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி
வங்கி வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய வசதிகளை ரிசர்வ் வங்கி முன்மொழிந்துள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்கள் கையில் உள்ள ரொக்கப் பணத்தை டெபாசிட் இயந்திரங்கள் மூலம் செலுத்தி வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்துகொள்வது வழக்கம். இந்நிலையில், டெபாசிட் இயந்திரங்களில் யு.பி.ஐ பயன்படுத்தி டெபாசிட் செய்வதற்கான வசதி அறிமுகப்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
பணம் டெபாசிட்
மேலும் தற்போது, மொபைல் வாலட் நிறுவனங்களின் மொபைல் ஆப் அல்லது இணையதளம் வாயிலாகவே வாலட் பயன்படுத்தி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடிகிறது.

இதனை மூன்றாம் தரப்பு யு.பி.ஐ ஆப்களிலும் வாலட்டுகளைப் பயன்படுத்தி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானுக்குள்ளே மொசாட்டின் இரகசிய தளங்கள் : அரபு நாடுகளின் மீதான தாக்குதலின் பின்னணியில் யார்..! IBC Tamil
தாக்குதலில் ஒரு கால் இழப்பு : சிகிச்சைக்காக இரகசியமாக ரஷ்யா அழைத்துச் செல்லப்பட்ட மொஜ்தபா கமேனி...! IBC Tamil
தமிழ் புத்தாண்டு சிறப்பு பலன்கள்: அரசியலில் டாப்புக்கு செல்லப்போகும் கன்னி! இது நடந்தே தீரும் Manithan