வங்கி கடன் வாங்கியோர் கவனத்திற்கு! ரெப்போ வட்டி விகிதம் - RBI அறிவிப்பு!
வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரெப்போ வட்டி
2024-25ம் நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான வட்டி விகிதங்கள் தொடர்பாக ரிசர்வ் வங்கி அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரிசர்வ் வங்கி பற்ற வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, ரெப்போ வட்டி விகிதம் அதே 6.5 சதவிகிதமாகவே தொடரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் வெளியான அந்த அறிவிப்பில், ரெப்போ வட்டி விகிதத்தில் தொடர்ந்து ஏழாவது முறையாக எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
RBI அறிவிப்பு
ரெப்போ வங்கி வட்டி விகிதம் எந்தவித மாற்றமின்றி 6.5% ஆகவே தொடரும் எனவும், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் வட்டி விகிதமான ரெப்போ ரேட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகப் பொருளாதாரம், தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருப்பதால் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என தெரிகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி கடந்த சில மாதங்களுக்கு முன் ரெப்போ விகிதத்தை சுமார் 250 அடிப்படை புள்ளிகள் அதாவது 2.5 சதவீதம் வரையில் உயர்த்தியது. 2022ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்பு ரெப்போ விகிதம் 4.5 சதவீதம் என்று இருந்த நிலையில் தற்போது 6.5 என உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தது.
ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லாததால் வீட்டுக்கடன், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமின்றி பழைய நிலையே தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.