ராமனாக அண்ணன் எடப்பாடி , லட்சுமணனாக ஒன்றரை கோடி தொண்டர்கள் : ஆர்.பி.உதயகுமார் புகழாரம்
அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்குகிய நிலையில் கூட்டத்தை புறக்கணித்த ஓ. பன்னீர்செல்வம் இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார்.
கலவரமான அதிமுக
அப்போது அங்கிருந்த எடப்படி பழனிசாமி ஆதரவாளர்கள் ஓபிஎஸ் வருகையை அறிந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் இரு த்ஜரப்பினரும் கற்களை கொண்டு தாக்கி கலவரத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அதிமுக கட்சி அலுவலகத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கட்சி அலுவலகத்திற்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது. அதே சமயம் வானகரத்தில் ஈபிஎஸ் தலமையகத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கட்டபொம்மன் பிறந்த மண்ணிலே தான் எட்டப்பனும் பிறக்கிறான்
அத்துடன் பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொருளாளருக்கான அதிகாரங்களை குறைத்து பொதுச்செயலாளருக்கு கூடுதல் அதிகாரம் தரப்பட்டுள்ளது. இரட்டை இல்லை சின்னத்தை ஒதுக்க கோரி கையெழுத்திடும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கே உண்டுஎனவும் ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கபட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஒரு தலைமையை அடையாளம் காட்டும் நிகழ்வு இது. கடுமையான உழைப்பின் அடையாளம் யார்... கடமையான பண்பு கொண்டவர் யார், தடுமாறாத மனம் உறுதி கொண்டவர் யார்.. யார்.. யார்.. என்றால் அது எடப்பாடியார்.
அந்த ஒற்றை சொல்லிலே இத்தனைக்கு மொத்த உருவமாக இருந்து நம்மை வழிநடத்திக்கொண்டிருக்கார். உழைப்பால் உயர்ந்தவர். விடாமுயற்சியால் விண்ணை தொட்டவர்.
இன்று ராமனாக அண்ணன் எடப்பாடி பழனிசாமிக்கு மகுடம் சூட்டும்போது லட்சுமணனை காணவில்லை என கலங்க வேண்டாம். இதோ ஒன்றரை கோடி தொண்டர்கள் லட்சுமணனாக நம்மிடத்திலே இருக்கிறார்கள். என்ன செய்வது கட்டபொம்மன் பிறந்த மண்ணிலே தான் எட்டப்பனும் பிறக்கிறான் எனக் கூறினார்.
கலவரமான அதிமுக தலைமை அலுவலகம் , பூட்டி சீல் வைத்த அதிகாரிகள்