கலவரமான அதிமுக தலைமை அலுவலகம் , பூட்டி சீல் வைத்த அதிகாரிகள்
அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்குகிய நிலையில் கூட்டத்தை புறக்கணித்த ஓ. பன்னீர்செல்வம் இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார்.
கலவரமான அதிமுக அலுவலகம்
அப்போது அங்கிருந்த எடப்படி பழனிசாமி ஆதரவாளர்கள் ஓபிஎஸ் வருகையை அறிந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் இரு த்ஜரப்பினரும் கற்களை கொண்டு தாக்கி கலவரத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அதிமுக கட்சி அலுவலகத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. . இதையடுத்து, பூட்டியிருந்த தலைமை அலுவலகத்தை உடைத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தலைமை அலுவலகத்தை கைப்பற்றினர். இருதரப்பினரிடையே நடைபெற்ற மோதலில் பலருக்கு காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, அந்தப் பகுதிக்கு காவல் துறையினர் விரைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு காவல் துறையினரின் கட்டுப்பாட்டுக்கு அந்தப் பகுதி கொண்டுவரப்பட்டது.
சீல் வைக்கப்பட்ட அதிமுக தலமை அலுவலகம்
அதேநேரம், தலைமை அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்களை ஓபிஎஸ் பிரசார வாகனத்தில் அவரது ஆதரவாளர்கள் வைத்தனர். இதனிடையே, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிராக இபிஎஸ் தரப்பினர் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
வருவாய் கோட்டாட்சியர், காவல் துறையினருடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். பின்னர், அதிமுக தலைமை அலுவகத்திற்கு காவல் துறையினர் பாதுகாப்புடன் கோட்டாட்சியர் வந்தார்.
ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதிமுக தலைமையகத்திற்குள் கூடியிருப்பது சட்டவிரோதம் என அதிகாரிகள் நோட்டீஸ் அளித்தனர்.
இந்த நிலையில் , சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் சாய்வர்தினி சீல் வைத்தார். சட்டப்பிரிவு 145 இன் படி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஓபிஎஸ் தர்ணா
அப்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து வெளியேற ஓ. பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்து தனது ஆதரவாளர்களுடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அதன் தொடர்ச்சியாக, வருவாய் கோட்டாட்சியர் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்தார். அதிமுக உள் அரங்கம் சீல் வைக்கப்பட்டதை அடுத்து, அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட ஓபிஎஸ் தற்போது அங்கிருந்து கிளம்பினார்.