அதிமுக கட்சியிலிருந்து எடப்பாடி, ஓ.பி.எஸ்.- ஐ நீக்கியது சரியே கிடையாது - சசிகலா பேட்டி
அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. கட்சி அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்பில் இருந்தும்ஓபிஎஸ் நீக்கம் செய்யப்படுவதாக நத்தம் விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.
ஓபிஎஸ்
ஓபிஎஸ் மட்டுமின்றி வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரும் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஈபிஎஸ்
செய்தியாளர்களிடம் பேசிய ஒபிஎஸ், என்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி, மற்றும் கே.பி.முனுசாமியை அதிமுகவில் இருந்து நீக்குவதாக ஓ.பி.எஸ் அறிவித்துள்ளார். ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக மாறி மாறி அறிவித்துக்கொள்வது அதிமுக கட்சியினரிடையே குழப்பத்தையும் கலவரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சசிகலா பேட்டி
இந்நிலையில், இன்று நிருபர்களை சந்தித்த சசிகலா பேசுகையில், அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் என்னைத்தான் பொதுச்செயலாளராக ஆக வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்று சேரும் நேரம் வந்து விட்டது. பணம் அதிகாரம் வைத்து அடைந்த எந்த பதவியும் நிலைக்காது.
மேலும், நான் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது தற்போது கூட்டிய அதிமுக பொதுக்குழுவே தவறானது. இபிஎஸ் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்றபோது அவர் ஓபிஎஸ்-ஐ நீக்கியது எவ்வாறு செல்லுபடியாகும் என்று தெரிவித்துள்ளார்.
சமூக விரோதிகள் துணையுடன் ஈனத்தனமான செயலை செய்துள்ளார் ஓபிஎஸ் - ஜெயக்குமார் பேட்டி