Tuesday, Jul 8, 2025

அரசியல் இருக்காதுனு நம்பிதானே வந்தோம்; இப்படி செஞ்சுட்டீங்களே? பாஜகவுக்கு எச்சரிக்கை

ADMK BJP Madurai Murugan
By Sumathi 14 days ago
Report

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பாஜகவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அண்ணா விவகாரம் 

மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிட கழக மூத்த தலைவர்களான அறிஞர் அண்ணா மற்றும் பெரியாரை விமர்சித்து வீடியோ வெளியிடப்பட்டது.

அரசியல் இருக்காதுனு நம்பிதானே வந்தோம்; இப்படி செஞ்சுட்டீங்களே? பாஜகவுக்கு எச்சரிக்கை | Rb Udayakumar Condemns Video Criticizing Anna

இந்த வீடியோ ஒளிபரப்பிய போது மேடையில் அதிமுக முன்னாள் அமைச்சர்களும் பங்கேற்றது சர்ச்சையாக வெடித்தது. இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் வீடியோ வெளியிட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,

மதுரையில் நடைபெற்ற மருக பக்தர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார்கள். முருக பக்தர்களாக கலந்து கொண்டோம். நீதிமன்ற உத்தரவின் படி அரசியல் இல்லாத முருக பக்தர்கள் மாநாடு என்ற காரணத்தால் முருக பக்தர்கள் பங்கேற்கிறார்கள். அதே போலவே அந்த அழைப்பை ஏற்று பங்கேற்றோம்.

அரசியல் இருக்காது என்ற நம்பிக்கையில் மாநாட்டில் கலந்து கொண்டோம். அப்போது ஒளிபரப்பப்பட்ட வீடியோவில் பேரறிஞர் அண்ணா, பெரியார் குறித்த அவதூறு பரபரப்பப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. அதிமுக மீதும் விமர்சனங்கள் எழுந்தது. அதிமுக ஒரு நாளும் கொள்கை, லட்சியம் கோட்பாடுகள் விட்டுக்கொடுக்காது.

போலிப் பாசம் தமிழுக்கு.. பணம் எல்லாம் சமஸ்கிருதத்துக்கு - எகிறிய ஸ்டாலின்

போலிப் பாசம் தமிழுக்கு.. பணம் எல்லாம் சமஸ்கிருதத்துக்கு - எகிறிய ஸ்டாலின்

உதயகுமார் விளக்கம்

இது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே அதிமுக மீது ஏதாவது கிடைக்காத என்ற காரணதால் தற்போது முருகர் பக்தர் மாநாட்டில் நடைபெற்ற சம்பவத்தை அதிமுக மீது விமர்சிக்கப்படுகிறது. ஏற்கனவே அறிஞர் அண்ணா- புரட்சி தலைவி அம்மா பற்றி தவறாக பேசியதால் கூட்டணி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி என்ன முடிவெடுத்தார்கள் என அனைவருக்கும் தெரியும்.

rb udhayakumar

இந்த நிலையில் மாநாட்டில் தீர்மானங்கள், உறுதி மொழிக்கும் அதிமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மாநாட்டில் எந்த நடுமுறையை கையாலப்போகிறார்கள் என நமக்கு தெரியாது. அவதூறு வீடியோ ஒளிபரப்ப போவதே தெரியாது. மேடைக்கு முன்பு ஒளிபரப்பப்பட்டது முழு வீடியோ பார்க்க வாய்ப்பு இல்லை.

இருந்த போதும் எங்கே எந்த இடத்தில் அண்ணா பெரியாருக்கு அவதூறு வந்தாலும் தட்டிக்கேட்பதற்கு எதிர்து நிற்போம். ஆகவே அண்ணா மற்றும் பெரியாரை அவதூறு செய்து ஒளிபரப்பிய வீடியோவிற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.

அழைப்பின் அடிப்படையில் முருக பக்தர்கள் என்ற முறையில் சென்றோம். மேடை நாகரிகத்தை கருதி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என கற்றுத்தந்துள்ளார்கள் அந்த வகையில் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.