போலிப் பாசம் தமிழுக்கு.. பணம் எல்லாம் சமஸ்கிருதத்துக்கு - எகிறிய ஸ்டாலின்
போலிப் பாசம் தமிழுக்கு; பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு என முதல்வர் ஸ்டாலின் காட்டமாக தெரிவித்துள்ளார்.
பாஜக அரசு நிதி
தமிழ் உள்ளிட்ட பிற செம்மொழிகளை புறக்கணித்து சமஸ்கிருதத்திற்கு அதிக அளவில் மத்திய பாஜக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் தெரியவந்துள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகியவற்றிற்கான மொத்த செலவான ரூ.147.56 கோடியைவிட 17 மடங்கு அதிகம்.
ஸ்டாலின் விமர்சனம்
சமஸ்கிருதத்திற்கு ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக ரூ.230.24 கோடியும், தமிழ் உள்ளிட்ட மற்ற ஐந்து மொழிகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் ரூ.13.41 கோடியும் செலவு செய்துள்ளது.
இந்நிலையில், இதனை விமர்சித்துள்ள முதல்வர் முக ஸ்டாலின், "சமஸ்கிருதம் கோடிக்கணக்கில் பணம் பெறுகிறது. தமிழ் மற்றும் பிற தென்னிந்திய மொழிகளுக்கு முதலைக் கண்ணீர் மட்டுமே கிடைக்கிறது.
போலிப் பாசம் தமிழுக்கு; பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு!" எனத் தெரிவித்துள்ளார்.

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
