இது முன்னாடியே தெரிஞ்சிருந்தா டைவர்ஸ் பண்ணியிருப்பேன் - வைரலாகும் மகாலெட்சுமி குறித்த ரவீந்தரின் தகவல்!
தயாரிப்பாளர் ரவீந்தரின் தகவல் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
ரவீந்தர்-மகாலட்சுமி
சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்ததன் மூலம் பிரபலமானவர் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர். லிப்ரா புரோடக்சன்ஸ் பெயரில் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.
முதலீடு செய்தால் நல்ல லாபம் தருவதாக கூறி போலி ஆவணங்களை தயாரித்து ரூ.16 கோடி வரை மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் செப்டம்பர் மாதம் 7 ம் தேதி கைது செய்யப்பட்டார்.
வைரலாகும் தகவல்
தற்போது நிபந்தனைகளுடன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், முன்னதாக ரவீந்தர் இன்ஸ்டா லைவில், பேசிய தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
அதில், தன்னுடைய மனைவி தான் நடித்துவரும் அன்பே வா சீரியலை தொடர்ந்து பார்க்க வைப்பதாகவும் இதை மட்டும் தான் முன்பே பார்த்திருந்தால் மகாலட்சுமியை டைவர்ஸ் செய்திருப்பேன்.
ஐயய்யோ, இதையே ஹெட்டிங் ஆக்கிடுவாங்களே என பேசியிருந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொண்டது முதல் பல சர்ச்சைகளின் அடிப்படையில் தற்போது வரை ஹாட் டாப்பிக்கில் இருந்து வருகின்றனர்.