சிக்கிய ரவீந்தர்; உயர்நீதிமன்றம் உத்தரவு - ஆனால் ஃபோட்டோஷூட்டில் பிஸியாக மகாலெட்சுமி!
ரவீந்தர் மோசடி வழக்கில் உயர்நீதிமன்றம் போலீஸாருக்கு அறிக்கை வெளியிட உத்தரவிட்டுள்ளது.
ரவீந்தர் மோசடி
சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்ததன் மூலம் பிரபலமானவர் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர். லிப்ரா புரோடக்சன்ஸ் பெயரில் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.
முதலீடு செய்தால் நல்ல லாபம் தருவதாக கூறி போலி ஆவணங்களை தயாரித்து ரூ.16 கோடி வரை மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் செப்டம்பர் மாதம் 7 ம் தேதி கைது செய்யப்பட்டார்.
கண்டுக்கொள்ளாத மகாலெட்சுமி
விசாரணையில், ரவீந்தர் சந்திரசேகர் தரப்பில் புகார்தாரருக்கு ரூ.2 கோடி திரும்ப வழங்கப்பட்டுவிட்டது என கூறப்பட்டது. ஆனால் புகார்தாரரான பாலாஜி தரப்பு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதை கேட்ட நீதிபதி கார்த்திகேயன், ரூ.2 கோடி திரும்ப வழங்கியதாக கூறப்படும் விவகாரத்தில் அதுதொடர்பாக விசாரணை நடத்தி அதற்கான ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய போலீசுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், இதை எதையும் கண்டுக்கொள்ளாமல் மகாலெட்சுமி சீரியல், ஃபோட்டோஷூட், விளம்பரம் என நடிப்பில் பிஸியாக உள்ளார். இதனையொட்டி ரசிகர்கள் நெகட்டிவ் கமெண்டுகளை குவித்த வண்ணம் உள்ளனர்.