ஆஸ்காரே கொடுக்கலாம்; நடித்த ஆப்கானிஸ்தான் வீரர் - கலாய்த்த அஸ்வின்!

Ravichandran Ashwin Afghanistan Cricket Team T20 World Cup 2024
By Sumathi Jun 25, 2024 01:00 PM GMT
Report

வெற்றிக்காக நடித்த ஆப்கானிஸ்தான் வீரரை அஸ்வின் கலாய்த்துள்ளார்.

Afg vs Ban

2024 டி20 உலகக் கோப்பையில் வங்கதேச மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளை வெளியேற்றி ஆப்கானிஸ்தான் செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது.

ashwin

ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ரசித் கான், நவீன் தலா 4 விக்கெட்டுகள் எடுத்தனர். அதனால் முதல் முறையாக ஐசிசி தொடரின் செமி ஃபைனலுக்கு தகுதி பெற்ற ஆப்கானிஸ்தான் புதிய சாதனை படைத்தது. இதில், 12வது ஓவர் வீசிக் கொண்டிருக்கும் போது மழை வருவது போல் தெரிந்தது.

அப்போது டிஎல்எஸ் விதிமுறைப்படி வங்கதேசத்தை விட ஆப்கானிஸ்தான் பெறுவதற்கான வாய்ப்பிருந்தது. இதனால் பெவிலியனில் இருந்த ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஜோனதன் ட்ராட் எதையாவது செய்து போட்டியை கொஞ்சம் மெதுவாக்குங்கள் என்று சைகை செய்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு - டேவிட் வார்னர் அதிரடி அறிவிப்பு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு - டேவிட் வார்னர் அதிரடி அறிவிப்பு

ரசிகர்கள் கிண்டல்

உடனே, ஆப்கானிஸ்தான் வீரர் குல்பதின் நைப் உடனடியாக தம்முடைய தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு காயமடைந்தது போல் அப்படியே களத்தில் விழுந்தார். அதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணி மருத்துவ குழுவினர் அவரை சோதித்ததால் சில நிமிடங்கள் ஆட்டம் தடைப்பட்டது.

afg vs ban

இதனைப்பார்த்த அஸ்வின் அஸ்வின் கால்பந்து போல இவரை சிவப்பு அட்டை கொடுத்து வெளியேற்றுங்கள் என்று எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து, குல்பதின் நைப் உண்மையாக காயடைந்துள்ளேன் என்பதை காட்டுவதற்காக பெவிலியன் சென்று அமர்ந்து கொண்டார்.

ஆனால் போட்டி முடிந்ததும் அவர் தான் முதல் ஆளாக ஓடிவந்து வெற்றியை கொண்டாடினார். இதனைப்பார்த்த ரசிகர்கள் இவருக்கு ஆஸ்கார் விருதே கொடுக்கலாம் என நக்கலடித்து வருகின்றனர்.