'சோனமுத்தா.. போச்சா' பேட் கம்மின்ஸ் பேட்டி வைரல் - வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
ஆஸ்திரேலிய அணி வீரர் பேட் கம்மின்ஸின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியா
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2024 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் சூப்பர் 8 சுற்றில் தேவையான வெற்றிகளை பெற்று இந்தியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
மேலும், வங்கதேச அணியுடனான ஆப்கானிஸ்தானின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணியும் சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறியுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டனான பேட் கம்மின்ஸ்,
கவலையில்லை
டி20 உலகக்கோப்பைக்கு முன் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு செல்லும் 4 அணிகளின் பெயரை பேட் கம்மின்ஸிடம் தொகுப்பாளர் கேட்டிருப்பார்.
அதற்கு பதிலளித்த அவர் "கண்டிப்பாக ஆஸ்திரேலியா செல்லும் என்றும், மற்ற 3 அணிகள் குறித்து எனக்கு கவலையில்லை" என்றும் தெரிவித்திருப்பார். இந்நிலையில் இந்த வீடியோவை பதிவிட்டு பேட் கம்மின்ஸை டேக் செய்த ரசிகர்கள், "என்ன சோனமுத்தா போச்சா" என்ற வடிவேலுவின் டயலாகுடன் ஒப்பிட்டு அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

சிஐடியினரால் சுற்றிவளைக்கப்பட்ட மட்டக்களப்பு : அதிரடியாக தூக்கப்படும் பிள்ளையானின் சகாக்கள் IBC Tamil
