சதங்கள் முக்கியமல்ல.. இதுதான் முக்கியம் - அரையிறுதியில் ரோஹித்தின் பிளான் என்ன?

Rohit Sharma Cricket Indian Cricket Team Sports T20 World Cup 2024
By Jiyath Jun 25, 2024 06:59 AM GMT
Report

இந்திய அணியின் வெற்றி குறித்து கேப்டன் ரோஹித் ஷர்மா பேசியுள்ளார். 

இந்தியா வெற்றி 

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய சூப்பர் 8 போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

சதங்கள் முக்கியமல்ல.. இதுதான் முக்கியம் - அரையிறுதியில் ரோஹித்தின் பிளான் என்ன? | Rohit Sharma About Win Against Australia

இந்த போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா 92 ரன்களை விளாசினார். இந்நிலையில் இந்திய அணியின் வெற்றி குறித்து பேசிய அவர் "அரை சதம், சதம் போன்றவை முக்கியமல்ல. பவுலர்கள் மீது அழுத்தத்தை போட வேண்டும். அதற்கு நீங்கள் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும்.

'சோனமுத்தா.. போச்சா' பேட் கம்மின்ஸ் பேட்டி வைரல் - வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

'சோனமுத்தா.. போச்சா' பேட் கம்மின்ஸ் பேட்டி வைரல் - வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

அரையிறுதி 

அதற்காக களத்தின் ஒருபுறம் மட்டுமின்றி அனைத்து திசைகளையும் பயன்படுத்த முயன்றேன். ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். ஒவ்வொரு வீரரும் தனிப்பட்ட முறையில் சிறப்பாக செயல்பட வேண்டிய தருணமாகவும் அமைந்தது.

சதங்கள் முக்கியமல்ல.. இதுதான் முக்கியம் - அரையிறுதியில் ரோஹித்தின் பிளான் என்ன? | Rohit Sharma About Win Against Australia

அரையிறுதி சுற்றில் பெரிதாக, வித்தியாசமாக எதையும் நாங்கள் செய்யப் போவதில்லை. இதுவரை எப்படி விளையாடி வருகிறோமோ, அப்படிதான் விளையாடுவோம். எதிர்காலத்தை நினைத்து கூடுதல் அழுத்தத்துடன் விளையாடத் தேவையில்லை என நான் கருதுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.