சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு - டேவிட் வார்னர் அதிரடி அறிவிப்பு

David Warner Sunrisers Hyderabad Cricket Australia Cricket Team
By Karthikraja Jun 25, 2024 10:35 AM GMT
Report

 பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

டேவிட் வார்னர்

37 வயதான டேவிட் வார்னர் அண்மையில் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் தற்போது ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வார்னர் அறிவித்துள்ளார். 

david warner retirement

2009 ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி சார்பில் அறிமுகமானார் டேவிட் வார்னர். இது வரை 161 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 6,932 ரன்கள் குவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக டேவிட் வார்னர் 49 சதங்களும், 98 அரை சதங்களும் அடித்துள்ளார். 

“அவர மாதிரி ஏன் உங்களால அடிக்க முடியல டேடி” - டேவிட் வார்னரை கேள்வி கேட்கும் மகள்கள்

“அவர மாதிரி ஏன் உங்களால அடிக்க முடியல டேடி” - டேவிட் வார்னரை கேள்வி கேட்கும் மகள்கள்

ஐபிஎல்

2018 ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை வேண்டுமென்றே சேதப்படுத்தியதற்கான சர்ச்சையில் சிக்கிய டேவிட் வார்னர்க்கு ஒரு ஆண்டு காலம் விளையாட தடை விதித்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். தடைக்கு பின் மீண்டும் அணியில் இடம்பிடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஐபிஎல் தொடரில் 6000 ரன்களை குவித்ததோடு, சிறந்த பேட்ஸ்மேன்க்கான ஆரஞ்சு தொப்பியை 3 முறை பெற்றுள்ளார். 2009 முதல் 2013 வரை டெல்லி அணிக்காக ஆடினார். 2013 முதல் ஹைதராபாத் அணிக்கு தேர்வான இவர் அங்கு கேப்டனாக செயல்பட்டார். இவரது தலைமையில் ஹைதராபாத் அணி 2016ல் ஐபிஎல் தொடரை வென்றது. 2022 ல் மீண்டும் டெல்லி அணியால் வாங்கப்பட்டார். 

david warner srh ipl2016

கிரிக்கெட் வரலாற்றில், எந்த ஒரு உள்ளூர் கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாமல் ஆஸ்திரேலியா அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை டேவிட் வார்னர் பெற்றுள்ளார்.